தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/படித்ததும் வேலை தரும் பாடத்திட்டங்கள்

படித்ததும் வேலை தரும் பாடத்திட்டங்கள்

படித்ததும் வேலை தரும் பாடத்திட்டங்கள்


UPDATED : மே 26, 2011 12:00 AM

ADDED : மே 26, 2011 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 26, 2011 12:00 AM ADDED : மே 26, 2011 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இத்தகைய திறமைகளை ஏற்படுத்தும் வகையில், டி.வி.எஸ்., தொழில்நுட்ப கல்லூரி புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, டி.வி.எஸ்., தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மாயா நரசிம்மன், ஆலோசகர் ரகு ஆகியோர் கூறியதாவது: சென்னை வானகரத்தில், பாரிவேர் ரோகா நிறுவனத்துடன் இணைந்து பிளம்பர்களுக்கான தொழிற்பயிற்சி வகுப்புகளை, நாளை முதல் அளிக்க உள்ளோம்.


பிளம்பர், தச்சர், எலக்ட்ரிஷியன், மேஸ்திரி, பெயின்டர் போன்ற பணிகளை செய்ய தகுதி வாய்ந்த நான்கு கோடி தொழிலாளர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் தேவைப்படுவர். இதை கருத்தில் கொண்டே, இன்று பயன்பாட்டிற்கு வந்துள்ள அதிநவீன பொருட்கள் அனைத்தையும் கையாளும் வகையில் பயிற்சி இருக்கும். 20 முதல் 25 மாணவர்களை கொண்டு, ஆண்டுக்கு ஆறு தொகுதிகளாக வகுப்புகள் நடத்தப்படும்.


புத்தகங்களை கொண்டு 30 சதவீத பாடமும், 70 சதவீதம் நேரடி அனுபவத்தை கொண்டதாக, குறைந்த கட்டணத்திலும் இப்பயிற்சி இருக்கும். நாடு முழுவதும் ஏழு இடங்களில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பாக இக்கல்வி தரப்படும். பயிற்சி முடித்தவர்கள் உடனடியாக வேலையை பெற முடியும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us