UPDATED : மே 31, 2011 12:00 AM
ADDED : மே 31, 2011 11:49 AM
10-ம் வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் விண்ணப்பம் வழங்காததால் மாணவ-மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
10௦-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த 27ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழூதிய மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 20௦ம் தேதி பள்ளிக்கூடங்களில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
மறுகூட்டலுக்கான விண்ணப்ப படிவங்களையும், பெயிலானவர்கள் சிறப்பு துணைத்தேர்வு எழூதுவதற்கான விண்ணப்பங்களையும் 30௦ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது.
சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், எழூம்பூர் சி.எம்.டி.ஏ. பாலம் எதிரில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் (சென்னை வடக்கு) உள்பட ஐந்து இடங்களில் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும் என்று தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி, நேற்று காலை 10௦ மணிக்கு மறுகூட்டல் விண்ணப்பம் வாங்குவதற்காக எழூம்பூரில் உள்ள சென்னை வடக்கு கல்வி மாவட்ட அதிகாரி அலுவலகத்திற்கு ஏராளமான மாணவ-மாணவிகளும் அவர்களின் பெற்றோரும் சென்றிருந்தனர். ஆனால், மறுகூட்டலுக்கான விண்ணப்பம் தங்களுக்கு வரவில்லை என்று சொல்லி அங்கிருந்த ஊழியர்கள் மாணவ-மாணவிகளை திருப்பி அனுப்பினார்கள். இதனால், மாணவ-மாணவிகளும் பெற்றோர்களும் ஏமாற்றத்தோடு திரும்பிய வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில், திடீரென அரசு தேர்வுத்துறை தலைமை அலுவலகத்தில் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதை கேள்விப்பட்ட மாணவ-மாணவிகளும் உடனடியாக டி.பி.ஐ. வளாகத்தில் குவிந்துவிட்டனர். ஒவ்வொருவரும் முண்டியடித்துக் கொண்டு விண்ணப்பங்களை வாங்கினார்கள். எவ்வித முன் அறிவிப்பு இல்லாமல் மறுகூட்டல் விண்ணப்பங்கள் வழங்கப்படுவது மதியம் 1 மணியளவில் திடீரென நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, பூர்த்தி செய்த மறுகூட்டல் விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் வாங்க மறுக்கிறார்கள் என்று சொல்லி பெற்றோர்கள் தேர்வுத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரியுடன் தகராறு செய்தனர். அவர்களை தேர்வுத்துறை துணை இயக்குனர் சமாதானப்படுத்தினார். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
