தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவுமூப்பு

இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவுமூப்பு

இளநிலை உதவியாளர் பணிக்கு பதிவுமூப்பு


UPDATED : ஜூன் 02, 2011 12:00 AM

ADDED : ஜூன் 02, 2011 11:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 02, 2011 12:00 AM ADDED : ஜூன் 02, 2011 11:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு குடிநீர் வாரிய பொதுமேலாளர் அறிவித்துள்ள இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பதிவு மூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர், 1.7.2010 அன்று பகிரங்க போட்டியாளர் எனில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை.


முன்னுரிமை உள்ளோர்: தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் 9.11.2010க்குள் பதிவு செய்த கலப்பு திருமணம் புரிந்தவர், சுதந்திர போராட்ட தியாகிகளின் நேரடி வாரிசு, மொழிப்போர் தியாகி.


தாழ்த்தப்பட்ட (பொது) பிரிவினரில் 23.7.2001க்குள் பதிவு செய்த மேற்கண்ட முன்னுரிமை தாரர்கள்,மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் 16.3.2007க்குள் பதிவு செய்த மேற்கண்ட முன்னுரிமைதாரர்கள் பிற்பட்ட வகுப்பினரில் முஸ்லிம்கள் 24.5.2011க்குள் பதிவு செய்த மேற்கண்ட முன்னுரிமை தாரர்கள் மற்றும் 14.11.2000க்குள் பதிவு செய்த முன்னாள் ராணுவத்தினரை சேர்ந்தவர்கள். பகிரங்க போட்டியாளர் 5.8.2003க்குள் பதிவு செய்த கலப்பு திருமணம் புரிந்தோர், சுதந்திர போராட்ட தியாகிகளின் நேரடி வாரிசு, மொழிப்போர் தியாகி ஆகியோர்.


முன்னுரிமை இல்லாதோர்: தாழ்த்தப்பட்டோர் அருந்ததியின பெண்களுக்கு 18.7.1994 வரையும், அருந்ததியின பொதுவானவர்களுக்கு 4.12.1991 வரையும், தாழ்த்தப்பட்ட பொதுவானவர்களுக்கு 12.8.1988 வரையும், மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 4.9.1986 வரையும், பிற்பட்ட வகுப்பினர் முஸ்லிம்களுக்கு 30.7.1981 வரையும், பகிரங்க போட்டியாளருக்கு 24.7.1984 வரையும் உத்தேச பதிவு மூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்தகுதியுள்ளவர்கள் ஜூன் 2ல், உரிய கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக அட்டையுடன் சென்று பதிவை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்,என உதவி இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us