தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிலுவைத்தொகை கிடைக்காததால் ஆசிரியர்கள் கவலை

நிலுவைத்தொகை கிடைக்காததால் ஆசிரியர்கள் கவலை

நிலுவைத்தொகை கிடைக்காததால் ஆசிரியர்கள் கவலை


UPDATED : ஜூன் 09, 2011 12:00 AM

ADDED : ஜூன் 09, 2011 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2011 12:00 AM ADDED : ஜூன் 09, 2011 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை: ஆறாவது ஊதியக் குழு, நிலுவை சம்பளத்தை பெற முடியாததால், அனைவருக்கும் கல்வித் திட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள், வேதனையில் உள்ளனர்.


ஆறாவது சம்பள குழுவின் பரிந்துரைப்படி, 2006, ஜன. 1ம் தேதி முதல், அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு அளிக்கப்பட்டது. இதற்கான பலன், 2009 முதல் வழங்கப்பட்டது. 2007-09 காலத்திற்கான தொகை, நிலுவையாக வைக்கப்பட்டு, அவை மூன்று கட்டங்களாக பிரித்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


இதையடுத்து, அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மூன்று பிரிவுகளாக நிலுவைத்தொகை முழுவதும் வழங்கப்பட்டு விட்டது. ஆனால், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கு மூன்றாவது நிலுவைத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் 6,500 ஆசிரியர்கள், 500 அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நிலுவைத் தொகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us