தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவு

சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவு

சமச்சீர் கல்வியை அமல்படுத்த உத்தரவு


UPDATED : ஜூன் 11, 2011 12:00 AM

ADDED : ஜூன் 11, 2011 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2011 12:00 AM ADDED : ஜூன் 11, 2011 10:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒரே மாதிரியான கல்வித் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறி, சமச்சீர் பாடத்திட்டத்தை ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்தனர்.


இதனைத் தொடர்ந்து இந்த கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீர் கல்வி முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு அதற்கான புத்தகங்களும் அச்சிடப்பட்டது.


இந்த சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.இ.அ.தி.மு.க. பதவியேற்றது. முதலமைச்சர் ஜெயலிதா, சமச்சீர் கல்வி திட்டம் தரமானதாக இல்லை என்று கூறி பழைய பாடத்திட்டத்தையே தொடர்வது என்று முடிவெடுத்து அறிவித்தார். சட்டப்பேரவையில் சமச்சீர் கலவி முறை (திருத்தச்) சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.


இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை, தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை காலையுடன் முடிவடைந்தது.


இதையடுத்து வழக்கின் தீர்ப்பு வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் அறிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கமச்சீர் கல்விச் சட்டம் தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.


அவருடைய உத்தரவில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, சமச்சீர் கல்வி தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மே மாதம் 22ம் தேதி தான் முதல் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியது. அடுத்த தினமே நடந்த கூட்டத்தில் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக பழைய பாடத்திட்டத்தின்படி புத்தகங்களை அச்சடிக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.


ஒரே நாளில் இந்த முடிவு எடுக்கப்பட்டது எப்படி? ஒரே நாளில் அனைத்து புத்தகங்களையும் ஆய்வு செய்தது எப்படி? இது இயலாத காரியம்.


இதன் மூலம் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் அவசரத்தில் எடுக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது. மேலும், சமச்சீர் கல்வி முறை (திருத்த) சட்ட மசோதா கொண்டு வருவதற்கான காரணம் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.


தமிழக அரசின் இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்படுமானால் சமச்சீர் பாடப் புத்தகங்களை அச்சடிப்பதற்காக செலவிடப்பட்ட ரூ.200 கோடிக்கும் மேலான மக்களின் பணம் என்ன ஆவது?


இப்போது உடனடியாக பழைய பாடத்திட்டத்தின் கீழ் புதிதாக புத்தகங்களை அச்சடித்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் பள்ளிகளுக்கு விநியோகிப்பது என்பது இயலாத காரியமாகும்.


அதில்லாமல், 2010-11ம் கல்வியாண்டில் பள்ளிகளில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இதை நீக்கிவிட்டு பழைய கல்வி முறையை கொண்டுவருவது என்பது, சமச்சீர் கல்வித் திட்டம் சரியானதுதான் என கடந்த ஆண்டு உயர் நிதிமன்றம் அளித்த உத்தரவுக்கே எதிரானதாக அமைந்துவிடும்.


மாணவர் சமுதாயத்தின் நலனையும் கருத்தில் கொண்டு பழைய கல்வி முறையை அமல்பத்துவதற்கு இந்த நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது. தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறை (திருத்த) சட்ட மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.


இதன்படி, 2011-12 கல்வியாண்டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையையே அமல்படுத்த வேண்டும். வேண்டுமென்றால் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் தேவையான பக்கங்களை நீக்கவோ அல்லது சேர்க்கவோ தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.


பாடப் புத்தகங்களில் குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ, தனி நபரையோ முன்னிலைப்படுத்தும் பாடப் பகுதிகளை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us