UPDATED : ஜூன் 14, 2011 12:00 AM
ADDED : ஜூன் 14, 2011 10:16 AM
கடந்தாண்டை காட்டிலும் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் புது பேக். ஷு, நோட்டு புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் அனைத்தும் புதன்கிழமை திறக்கப்படவுள்ளது.
நீண்ட விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு சில முக்கிய பள்ளிகளில் கடந்தாண்டு இறுதியிலேயே புதிய மாணவர்கள் சேர்க்கை முடிந்துவிட்டது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை முன்னிட்டு ஜவுளி நிறுவனங்களில் பள்ளி சீருடைகள் விற்பனை வேகமாக நடந்து வருகிறது. தற்போது அனைத்து பள்ளிகளுக்குமான யூனிபார்ம் ரெடிமேடாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் பெற்றோர்கள் ரெடிமேட் யூனிபார்ம்களை அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள்.
இதேபோல் ஸ்கூல் பேக்குகள் விற்பனையும் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. பேக் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளதால் இந்தாண்டு ஸ்கூல் பேக்குகளில் விலையும் சற்று அதிகரித்துள்ளது. பேக்குகளில் விலை அதிகரித்து இருந்தாலும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். பள்ளி சிறுவர், சிறுமிகளை இந்தாண்டு பென்டென், ஹெனமோண்டா மாடல் பேக்குகள் வெகுவாக கவர்ந்துள்ளது.
நோட்டு புத்தகங்கள், பென்சில், பேனா விற்கும் கடைகளில் பெரும் கூட்டம் காணப்படுகிறது. நாளை காலையில் புதிய பொருட்களுடன் பள்ளிக்குச் செல்ல மாணவர்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.
