தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியலை தேர்வு செய்தது சரிதானா?

பொறியியலை தேர்வு செய்தது சரிதானா?

பொறியியலை தேர்வு செய்தது சரிதானா?


UPDATED : ஜூன் 15, 2011 12:00 AM

ADDED : ஜூன் 19, 2011 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2011 12:00 AM ADDED : ஜூன் 19, 2011 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கவுன்சிலிங் தொடர்பான அடிப்படை உண்மைகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளவது அவசியம். கணிதம் (100), இயற்பியல் (50) மற்றும் வேதியியல் (50) பாடங்களில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்களின் கூட்டுத் தொகையே "கட் ஆப்' மதிப்பெண் என்கிறோம். தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கைகளுக்கு ஏற்றவாறு, 'கட்ஆப்' மதிப்பெண்ணுக்கு ஏற்றபடி இடம்  இருக்கின்ற  கல்லூரியில், பிடித்த பாடத்தை தேர்வு செய்யும் முறையே கவுன்சிலிங் என்று அழைக்கப்படுகிறது.


இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை பொறுத்தவரை வெளிப்படையாக நடைபெறும். அது தொடர்பான  விவரங்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வெப்சைட்டில் அப்டேட்  செய்யப்படுகின்றன. பத்திரிகைகளுக்கும் வழங்கப்படுகின்றன.


கவுன்சிலிங் விண்ணப்பப் படிவம் அனுப்பும் முன், மாணவர் தான் எந்த துறையில் படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்; பெற்றோருடன் சேர்ந்து அவர்கள்  முடிவு எடுக்க வேண்டும். இன்ஜினியரிங், விவசாயம், கம்ப்யூட்டர் சயின்ஸ், கலை  மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் எது தனக்கு பொருத்தமானது என்பதை  திட்டமிட வேண்டும்.


மாணவருக்கு கலை மற்றும் அறிவியல் நல்ல தேர்வு இல்லை என்று கூறிவிட முடியாது. அதேபோல் இன்ஜினியரிங் மட்டும்தான் சரியான தேர்வு என்றும் கூறி விட முடியாது. மாணவருக்கு எதில் தகுதி இருக்கிறதோ அதை சரியாக அடையாளம்  கண்டு, அத்துறையில் படிக்க வேண்டும். குடும்பத்துக்கும் மாணவருக்கும் ஏற்ற படிப்பு எது என்பதையும் தேர்வு செய்து படிக்க வேண்டும்.


இதற்கு ஏற்றாற்போல்தான் மாணவர் மருத்துவம் செல்ல வேண்டுமா, ஐ.டி.ஐ.,  செல்ல வேண்டுமா, டிப்ளமோ படிக்க வேண்டுமா என்பதை
முடிவு செய்ய வேண்டும். இன்ஜினியரிங் மட்டும்தான் கல்வி என்பது அல்ல. எந்த  படிப்புப் படித்தாலும் அதிலிருந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


பெற்றோர்களைப் பொறுத்தவரை எப்படியாவது கஷ்டப்பட்டு இன்ஜினியர் ஆக்கி விட வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, நான்கு ஆண்டுகள் படிப்பை  தொடர்வதில் சிக்கல் இருக்குமா என்பதைப் பற்றி அவர்கள் யோசிப்பதில்லை. வங்கிக் கடன் கிடைக்குமா, அப்படிக் கிடைத்தால் எவ்வளவு சதவீதம் கிடைக்கும்  என்பதைப் பற்றி அவர்கள் துவக்கத்தில் சிந்திப்பதில்லை. மீதம் எவ்வளவு கட்ட வேண்டியிருக்கும். அதை கட்டி முடித்துவிட முடியுமா? இதையெல்லாம்  குடும்பத்தில் முதலில் யோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும். இன்ஜினியரிங்  படிப்பை தேர்வு செய்யும் முன் இவற்றையெல்லாம் திட்டமிடவேண்டும்.


பள்ளி படிப்புவரை பொதுவாக பெற்றோர் தங்களது பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். அதுவே கல்லூரியில் சேர்ந்த பிறகு அந்தளவுக்கு அக்கறை செலுத்துவதில்லை. கல்லூரி, பாடப்பிரிவை தேர்வை செய்த பிறகும் தங்களது பிள்ளைகள் மீது நண்பர்களைப் போன்ற அணுகுமுறையுடன் கவனிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us