UPDATED : ஜூன் 16, 2011 12:00 AM
ADDED : ஜூன் 16, 2011 10:51 AM
ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா எனப்படும் செய்ல் நிறுவனம் இந்தியாவின் ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்களுள் முதன்மையானது. உள் நாட்டு கட்டுமானம், இன்ஜினியரிங், பவர், ரயில்வே, ஆட்டோமோடிவ் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கான ஸ்டீல் மற்றும் இரும்புத் தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவின் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் நான்கில் செய்ல் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தில் அட்டெண்டண்ட் டெக்னீசியன் டிரெய்னி பிரிவில் 11 இடங்களும், அட்டெண்டண்ட் ஜூனியர் ஸ்டாப் அசிஸ்டெண்ட் டிரெய்னி பிரிவில் 5 இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது: செய்ல் நிறுவனத்தின் மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க 01.03.2011 அன்று 21 வயது நிரம்பியவராகவும் 38 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தகுதி: அட்டெண்டண்ட் ஜூனியர் ஸ்டாப் அஸிஸ்டெண்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க பிளஸ் டூவிற்கு நிகரான படிப்புடன் எம்.எஸ்., ஆபிஸ் பேக்கேஜில் அனுபவம் தேவை. இருந்த போதும் பட்டப் படிப்பு அல்லது முது நிலைப் பட்டப்படிப்பு முடித்து ஸ்டெனோகிராபி அனுபவம் இருந்தால் முன்னுரிமை உள்ளது.
அட்டெண்டண்ட் டெக்னீசியன் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு அளவிலான படிப்பை முடித்து அதன் பின்னர் பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், மேசன், டர்னர், டீசல் மெக்கானிக், மோட்டார்வெகிக்கிள் மெக்கானிக் போன்ற பிரிவு ஏதாவது ஒன்றில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும். ஸ்டீல் நிறுவனத்தில் அப்ரெண்டிஸ்ஷிப் முடித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி? :
பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பத்தை நிரப்பி பின்வரும் முகவரிக்கு 20.06.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் "Application for the post of _________________"என்று குறிப்பிட வேண்டும்.
முகவரி:
Post Box No.16,
Post Office : Sector -1,
Bhilai Distt -Durg (CG), Pin - 490001.
விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள்: 20.06.2011
இணையதள முகவரி: www.sail.co.in
