தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலையில் இன்று கவுன்சிலிங்

வேளாண் பல்கலையில் இன்று கவுன்சிலிங்

வேளாண் பல்கலையில் இன்று கவுன்சிலிங்


UPDATED : ஜூன் 20, 2011 12:00 AM

ADDED : ஜூன் 20, 2011 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2011 12:00 AM ADDED : ஜூன் 20, 2011 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை வேளாண் பல்கலையில் வேளாண்மை, தோட்டக்கலை, பட்டுவளர்ப்பு, வனவியல் மற்றும் மனையியல் ஆகிய இளம் அறிவியல் பட்டப் படிப்புகளும், வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்தும் பொறியியல், உயிர் தொழில்நுட்பவியல், தோட்டக்கலை, ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உயிர் தகவலியல், வேளாண் தகவல் தொழில் நுட்பம், வேளாண் தொழில் மேலாண்மை ஆகிய இளம் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளும் உள்ளன.


இப்படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு, கடந்த 13ல் தரப்பட்டியல்(ரேங்க் லிஸ்ட்) வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் பல்கலையின் அண்ணா அரங்கில், இன்று முதல், வரும் 25ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது.


முதல் நாளான இன்று காலை 9.30 மணிக்கு 199.00 முதல் 192.75 கட்-ஆப் மதிப்பெண் வரையுள்ள 152 மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணி முதல் 192.50 முதல் 190.00 கட்-ஆப் மதிப்பெண் வரையுள்ள மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறும்.


நாளை 189.75 முதல் 188.00 வரையுள்ள மாணவர்களுக்கும், பிற்பகலில் 187.75 முதல் 186.00 கட்-ஆப் மதிப்பெண் வரையுள்ள மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறும்.


ஐந்து நாட்கள் நடைபெறும் கவுன்சிலிங்கில் 1,837 மாணவர்கள் பங்கேற்கின்றனர். தகுதியுள்ள மாணவர்களுக்கு கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு பெற்ற மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண்கள் www.tnau.ac.in என்ற பல்கலையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


கடிதம் கிடைக்காத தகுதியுள்ள மாணவர்கள், தங்கள் கட்-ஆப் மதிப்பெண்ணுக்கான குறிப்பிட்ட நாட்களில் பங்கேற்கலாம். மேல்நிலைப் பள்ளி மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் நகல்களை கொண்டு வர வேண்டும்.


அத்துடன், கவுன்சிலிங் கட்டணம் 2,000 ரூபாயை பணமாகவோ, தி டீன் (அக்ரிகல்ச்சர்) என்ற பெயரில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலையாகவோ கொண்டு வர வேண்டும். இத்தகவலை, பல்கலை முதல்வர் ராஜராஜன்(வேளாண்மை) தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us