தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.டி. மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல்

சி.டி. மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல்

சி.டி. மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல்


UPDATED : ஜூன் 21, 2011 12:00 AM

ADDED : ஜூன் 21, 2011 10:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2011 12:00 AM ADDED : ஜூன் 21, 2011 10:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்கள் கற்பித்தல் பணிக்காக அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை மூலம் சிடி வழங்கப்பட்டுள்ளது.


தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், முதல் 10 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாழ்வியல் திறன், இணைப்பு பயிற்சி கல்வி வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதில் கேட்டல், வாசித்தல், எழுதுதல், விவாதம் போன்ற தலைப்புகளில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி நடந்து வருகிறது. இதன் கற்பித்தல் குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறையால் சிடி வழங்கப்பட்டுள்ளது.


இந்த சிடிக்களை முதலில் ஆசிரியர்கள் பார்த்து தெரிந்து கொண்டு, அதன் பின் மாணவர்களுக்கு போட்டு காட்டி கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டிமன்றங்கள் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களை அதிகம் நெருங்குவது செய்தி தாள், ரேடியோ ,டிவி , இன்றைய மாணவர்களுக்கு தேவை ஆசிரியர், தோழர், பெற்றோர் போன்ற தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எழுதுதலில் கவிதைகள், படித்தல் பகுதியில் சித்தர் பாடல்கள், நளவெண்பா பாடல்கள் வழங்கப்பட்டுள்ளன.


இதை பின்பற்றியே மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் செய்ய, ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us