தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்பு

அரசு வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்பு

அரசு வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்பு


UPDATED : ஜூலை 02, 2011 12:00 AM

ADDED : ஜூலை 02, 2011 09:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2011 12:00 AM ADDED : ஜூலை 02, 2011 09:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், துபாய் நாட்டின் முன்னணி நிறுவனத்திற்கு 2 ஆண்டு அனுபவத்துடன், 33 வயதுக்குட்பட்ட, பி.இ., எலக்ட்ரிக்கல் தேர்ச்சி பெற்ற இன்ஜினியர்கள், மேற்பார்வையாளர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


மேலும் மூன்று ஆண்டு முன் அனுபவத்துடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்ற எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், பிளம்பிங், எலக்ட்ரானிக்ஸ், எச்.வி.ஏ.சி., எம்.இ.பி., மேற்பார்வையாளர், ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள், சென்ட்ரிங் கார்பென்டர்கள், ஏ.சி., டெக்னீசியன்கள், கொத்தனார்கள், பெயின்டர்கள் தேவைப்படுகின்றனர்.


ஐ.டி.ஐ., இல்லாதவர்கள் அரபு நாடுகளில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் இருந்தால் போதும். தகுதியுள்ளவர்கள் சுயவிபரம் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம் ஆகியவற்றின் நகல்கள், ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட நான்கு போட்டோவுடன், ஒஎண்-48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20 என்ற முகவரியில் உள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் ஜூலை 4ம் தேதி காலை 10 மணிக்கு நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.


இதுதொடர்பாக விபரம் பெற, 044- 24464368, 24464269ல் தொடர்பு கொள்ளலாம், என மதுரை மாவட்ட தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us