தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.ஏ., எம்.சி.ஏ., கலந்தாய்வு எப்போது?

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., கலந்தாய்வு எப்போது?

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., கலந்தாய்வு எப்போது?


UPDATED : ஜூலை 06, 2011 12:00 AM

ADDED : ஜூலை 06, 2011 05:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2011 12:00 AM ADDED : ஜூலை 06, 2011 05:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஆர். சுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இத்தகவலை தெரிவித்தார்.


மேலும், டான்செட் ரேங்க் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ரேங்க் பட்டியல் எங்களது இணையதளத்தில் ஜுலை 14ம் தேதி வெளியாகும். அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு ஜுலை 20 அல்லது 21ம் தேதி துவங்கும் என்றார்.


தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகமும், கல்லூரி கல்வி இயக்குனரகமும் இணைந்து நடத்தும் கலந்தாய்வு மூலம், தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை -அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் மொத்தம் 270 பொறியியல் கல்லூரிகளும், 84 கலைக் கல்லூரிகளும் எம்.பி.ஏ. படிப்பினை வழங்குகிறது. பொறியியல் கல்லூரிகள் அனைத்திலும் 9,654 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3,225 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.


அதேப்போல, 7,970 அரசு ஒதுக்கீட்டு இடங்களுடன் 197 பொறியியல் கல்லூரிகளும், 3,622 அரசு ஒதுக்கீட்டு இடங்களுடன் 120 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் எம்.சி.ஏ. படிப்புகளை வழங்குகின்றன.


எம்.பி.ஏ.விற்கு 11,700 விண்ணப்பங்களும், எம்.சி.ஏ.விற்கு 11,000 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன என்று கலந்தாய்வு நிர்வாகி எம். நடராஜன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us