UPDATED : ஜூலை 08, 2011 12:00 AM
ADDED : ஜூலை 08, 2011 10:16 AM
காலை 7 மணி முதலே மாணவர்களும், பெற்றோர்களும் அண்ணா பல்கலைக் கழக அரங்கிற்கு வந்து விட்டனர். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், ஒருவருக்கு ஒருவர் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர்.
இன்று காலை 9 மணிக்கு 199.75 கட்-ஆப் மதிப்பெண் எடுத்தவர்களுக்கும், 3 மணிக்கு 199.50 கட்-ஆப் மதிப்பெண் எடுத்தவர்களும், 4.30 மணிக்கு 199.25 கட்-ஆப் மதிப்பெண்ணிற்கும், 6 மணிக்கு 199.00 கட்-ஆப் மதிப்பெண்ணிற்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது
பொதுப்பிரிவு கவுன்சிலிங், இன்று துவங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடக்கிறது. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
பொறியியல், ரேங்க் பட்டியலில் முன்னணி இடங்களைப் பிடித்த பல மாணவர்கள், ஏற்கனவே மருத்துவப் படிப்புகளை தேர்வு செய்து விட்டனர். மருத்துவ படிப்புகளை தேர்வு செய்யாத மாணவர்கள், இன்றைய கவுன்சிலிங்கில் பங்கேற்பர்.
