UPDATED : ஜூலை 11, 2011 12:00 AM
ADDED : ஜூலை 11, 2011 12:40 PM
ஆனால், இந்த கல்வி ஆண்டில் மருத்துவ கலந்தாய்வில் இடம்பெற்றும், அதை நிராகரித்துவிட்டு 3 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
மருத்துவத்திற்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் கடந்த ஜுன் 30ம் தேதி துவங்கி 7ம் தேதி வரை நடந்தது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜுன் 30ம் தேதி துவங்கிய பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வில் தற்போது பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வு என இரண்டிற்குமே 864 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 855 மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. எனவே, இவர்கள் அனைவருமே மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று மருத்துவ படிப்பை தேர்வு செய்திருப்பர் என்பது உறுதியாகிறது.
மீதமுள்ள 9 பேரில், இரண்டு கலந்தாய்விலும் பங்கேற்றுவிட்டு, மருத்தவப் படிப்பில் சேர்ந்தவர்கள் 6 பேர். மீதமுள்ள 3 பேர், மருத்துவ படிப்பை விட்டுவிட்டு பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
