தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செய்ல் நிறுவனத்தில் காலி இடங்கள்

செய்ல் நிறுவனத்தில் காலி இடங்கள்

செய்ல் நிறுவனத்தில் காலி இடங்கள்


UPDATED : ஜூலை 30, 2011 12:00 AM

ADDED : ஜூலை 30, 2011 12:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2011 12:00 AM ADDED : ஜூலை 30, 2011 12:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா நிறுவனம் இந்தியாவின் ஸ்டீல் உற்பத்தியில் மிகவும் புகழ் பெற்றது. கட்டுமானப் பணிகளுக்கான ஸ்டீல் உற்பத்தி, இன்ஜினியரிங், பவர், ரெயில்வே, ஆட்டோமோடிவ் மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கான ஸ்டீல் உற்பத்தி செய்வதில் இந்த நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. மத்திய மகாரத்னா பொதுத் துறை நிறுவனங்களில் செய்ல் நிறுவனம் முக்கியமான ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் டெக்னிகல் மேனேஜ்மென்ட் டிரெய்னி பிரிவில் 318 இடங்களும், நிர்வாக மேனேஜ்மென்ட் டிரெய்னி பிரிவில் 57 இடங்களும் நிரப்பப் பட உள்ளன.

தேவைகள்: செய்ல் நிறுவனத்தின் பதவிகளுக்கு விண்ணப்பிக்க 01.07.2011 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். டெக்னிகல் பிரிவிற்கு விண்ணப்பிக்க மெக்கானிகல், எலக்ட்ரிகல், மெட்டலர்ஜி, சிவில், இ அண்டு டி, இன்ஸ்ட்ரூமெண்டேஷன், செராமிக்ஸ், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைனிங் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு இன்ஜினியரிங் படிப்பையோ அல்லது எம்.சி.ஏ.,வையோ குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

நிர்வாகப் பிரிவு மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்க பட்டப் படிப்பிற்குப் பின்னர் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.பி.ஏ., அல்லது பி.ஜி., டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் படிப்பை எச்.ஆர்., மார்கெட்டிங், பெர்சானல், பி.எம்., அண்டு ஐ.ஆர்., ஆகியவற்றில் சிறப்புப் படிப்பாக முடித்திருக்க வேண்டும்.

இதர விபரங்கள்: செய்ல் நிறுவனத்தின் பணி இடங்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் அல்லது குழு விவாதம் போன்ற முறைகளில் இருக்கும் என்று தெரிகிறது. இந்தப் பதவிகளுக்கு சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, திருச்சி, சேலம் ஆகிய மையங்கள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களில் நடத்தப்பட உள்ளது.

செய்ல் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க ரூ.500/க் கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையின் 31836070568 என்ற அக்கவுன்ட் எண்ணில் சி.ஏ.ஜி., கிளை, புதுடில்லியில் மாற்றத்தக்கதாக செலுத்தப்பட வேண்டும். இதன் பின்னர் ஆன்லைனில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை அறிய கட்டாயம் இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் பதிய இறுதி நாள்: 17.08.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 25.09.2011

இணையதள முகவரி: http://119.226.214.34/SAIL/onlineform/Download/SAIL%20Management%20Trainee%20-%20Full%20Advertisement.pdf

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us