UPDATED : ஜூலை 31, 2011 12:00 AM
ADDED : ஜூலை 31, 2011 11:20 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சமச்சீர் கல்வி பாட புத்தகம் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடலூர்
மாவட்டம், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளுக்கான சமச்சீர் பாட புத்தகங்கள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. சமச்சீர் பாடபுத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கக் கோரி பல்வேறு அமைப்புகள் விருத்தாசலத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் திடீரென இரு தினங்களுக்கு முன்பு இரவு புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து இரவு, பகலாக போலீசார் அறைக்கு முன் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டி.எஸ்.பி., அறிவழகன் அவ்வப்போது வந்து பாதுகாப்பு பணியை பார்வையிட்டு செல்கிறார்.