UPDATED : ஆக 05, 2011 12:00 AM
ADDED : ஆக 05, 2011 11:37 AM
அ நிறம் | அளவு
தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இடை நிற்றலைத் தடுக்கும் வகையில், மாணவ, மாணவியருக்கு புதிய ஊக்கத் தொகை திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் படிக்கும் மாணவர்களுக்கு முறையே ரூ.1,500ம், 2,000 ஆயிரமும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
இந்த தொகை பொதுத் துறை நிதி வங்கிகளில் வைப்புத் தொகையாக வைப்பீடு செய்யப்பட்டு மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடிக்கும் போது அவர்களிடம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தால் சுமார் 24,94,649 மாணாக்கர்கள் பயனடைவார்கள்.
பள்ளி செல்லாமல் இருக்கும் 56,113 சிறார்கள், நடப்பு கல்வியாண்டிலேயே பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
