தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரி மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி

கல்லூரி மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி

கல்லூரி மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி


UPDATED : ஆக 09, 2011 12:00 AM

ADDED : ஆக 09, 2011 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2011 12:00 AM ADDED : ஆக 09, 2011 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள சுமார் 30 கல்லூரிகளில் இருந்து தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புத் திறன் பயிற்சி அளிக்க இந்திய தொழிலகக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு தலைவர் என்.கே. ரங்கநாத் கூறுகையில், கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் இந்த பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இதுவரை 6 கல்லூரிகள் மற்றும் 12 நிறுவனங்கள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த திட்டத்தின்படி, 2011ம் ஆண்டுக்குள் 30 கல்லூரிகளும், 100 நிறுவனங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்.

நகரமல்லாத, கிராமப்புற மாணவர்களுக்கு, தொழில்துறையினரின் தேவை என்ன, வேலைவாய்ப்புக்காக மாணவர்கள் எவ்வாறு தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த பயிற்சி திட்டம், பொறியியல், கலை, அறிவியல், மேலாண்மை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமையும் என்று தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us