UPDATED : ஆக 29, 2011 12:00 AM
ADDED : ஆக 29, 2011 11:12 AM
""கல்வியோடு ஆளுமைத்திறன்களை வளர்த்துக்கொண்டால், மாணவர்கள் நிச்சயம் சாதிக்கலாம்,&'&' என, பாரதியார் பல்கலை ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய இயக்குனர் கூறினார். ஆலாந்துறை, இண்டஸ் இன்ஜினியரிங் கல்லூரியில், முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. பாரதியார் பல்கலை அண்ணா ஐ.ஏ.எஸ்., அகாடமி பயிற்சி இயக்குனர் பத்மநாபன் தலைமை வகித்து பேசியதாவது:
மருத்துவத்துறையில் மட்டும் 5 லட்சம் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். அமெரிக்காவிலுள்ள ஒட்டுமொத்த அறிவுஜீவிகளில் பெரும்பாலானோர் இந்தியர்கள்; குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
இதற்கு காரணம், தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்வியின் தரமாகும். இப்படி சர்வதேச அளவில் சாதிப்பதற்கு ஆளுமைத்தன்மைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, பத்மநாபன் பேசினார்.
