தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி. கல்வி கட்டணம் உயருகிறது

ஐ.ஐ.டி. கல்வி கட்டணம் உயருகிறது

ஐ.ஐ.டி. கல்வி கட்டணம் உயருகிறது


UPDATED : செப் 15, 2011 12:00 AM

ADDED : செப் 15, 2011 03:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2011 12:00 AM ADDED : செப் 15, 2011 03:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் உள்ள அனைத்து ஐஐடிக்களையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஐஐடி கவுன்சில், ஐஐடிக்களின் கல்விக் கட்டணத்தை 50 ஆயிரத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

தற்போது ஐஐடிகளில் ஒரு மாணவர் படித்து வெளியே வர நிர்வாகத்திற்கு மொத்தமாக 7 முதல் 8 லட்சம் வரை செலவாகிறது. ஆனால், மாணவரிடம் இருந்து வெறும் 50,000 மட்டுமே ஒரு ஆண்டுக்கு கல்விக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்று கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

இந்த கல்விக் கட்டண உயர்வை புதிய முறையில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதாவது, தற்போது வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தையே ஒரு மாணவர் சேர்க்கையின் போது செலுத்த வேண்டும். அம்மாணவர் படித்து முடித்து வேலையில் சேர்ந்த பிறகு மீதிப் பணத்தை எளிய தவணைகளில் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றார் அவர்.

அதே சமயம், மேற்கொண்டு உயர் கல்வியோ அல்லது ஆராய்ச்சியிலோ ஈடுபடும் மாணவர்களுக்கு இதிலிருந்து விலக்கும் அளிக்கப்படும் என்றார். இந்த கட்டண உயர்வு அரசு மூலமாகவே செயல்படுத்தப்டும்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த கல்விக் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இதன் மூலம் வெறும் 25 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே இந்த கல்விக் கட்டண உயர்வால் பாதிக்கப்படுவார்கள்.

மாநிலங்களுடன் கலந்தாலோசித்து இத்திட்டத்தின் மீது இறுதி முடிவெடுக்கப்படு என்றும் கபில் சிபல் கூறினார்.

மேலும், ஐஐடிக்களுக்கு ஒரே பொதுவான நுழைவுத் தேர்வு முடிவுக்கும் கவுன்சில் ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, மாணவர்களுக்கு பல நுழைவுத் தேர்வுகளில் இருந்து விடுதலை கிடைக்கும். அதேப்போல, இந்தியாவில் உள்ள அனைத்து ஐஐடிக்களின் செயல்பாடும் ஒன்றுபடும் என்பதாகும்.

இந்த திட்டத்தின் மூலம் ஐஐடி நுழைவுத் தேர்வுகளுக்காக பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்றார்.

ஐஐடிக்களில் பேராசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் பிஎச்.டி. பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றும் கபில் சிபல் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us