தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இக்னோவில் புதிய எம்.பி.ஏ. படிப்பு

இக்னோவில் புதிய எம்.பி.ஏ. படிப்பு

இக்னோவில் புதிய எம்.பி.ஏ. படிப்பு


UPDATED : செப் 20, 2011 12:00 AM

ADDED : செப் 20, 2011 11:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2011 12:00 AM ADDED : செப் 20, 2011 11:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: எம்.பி.ஏ., சமூக நலன் முனைவோர் படிப்பை, இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் செப்டம்பர் 19 ம் தேதி(ஞாயிறு) நடந்த விழாவில், இந்த படிப்பை அறிமுகப்படுத்தி, பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை கூறியதாவது: ஆங்கில வழி இரண்டாண்டு படிப்புக்கு, மொத்த கட்டணம், 48 ஆயிரம் ரூபாய். இளநிலை பட்டப்படிப்பில், 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் இதில் சேரலாம்.

வயது வரம்பு கிடையாது. மொத்த இடங்கள் 100. நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம், மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். வரும் அக்., 20ம் தேதி விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். நவம்பர் முதல் வாரத்தில் வகுப்புகள் துவங்கும். வகுப்புகள், அலுவலக நேரங்களில் இருக்காது. மாணவர்களுக்கு ஏற்ற நேரங்கள் மற்றும் சனி, ஞாயிறுகளில் வகுப்புகள் நடக்கும்.இவ்வாறு ராஜசேகரன் பிள்ளை கூறினார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிறப்பு அதிகாரி ஜெயராமன், இப்படிப்பின் முக்கியத்துவத்தை விளக்கி கூறியதாவது: எம்.பி.ஏ., படிப்பு என்றால், தொழில், வர்த்தக மேலாண்மை தான் நமக்கு நினைவுக்கு வரும். எல்லா தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கும் சமூக பொறுப்பு உண்டு. சமூக கடமைகளை நிறைவேற்ற, சமூக நலன் சார்ந்த முனைப்புத்திறன் வேண்டும்.

எனவே, தொழில் நிறுவனங்களில் பணிபுரிய, பயிற்சி பெற்ற சமூக நலன் முனைவோர் தேவைப்படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு இப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது. இப்படிப்பு முடித்தவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் பணியில் சேரலாம். மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தனியாகவும் துவக்கலாம்.
இவ்வாறு ஜெயராமன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us