UPDATED : அக் 06, 2011 12:00 AM
ADDED : அக் 06, 2011 11:19 AM
அ நிறம் | அளவு
தொட்டியம் கொங்குநாடு இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டிட பொறியியல் தொழில்நுட்ப அமைப்பு தொடக்க விழா நடந்தது.
விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் இணை செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் லூயிஸ் டிசோசா முன்னிலை வகித்தார். விழாவில், தொழில்நுட்பக்கல்லூரியில் கட்டிட பொறியியல் தொழில்நுட்ப அமைப்பை வேலூர் வி.ஐ.டி., பல்கலை பேராசிரியர் பொற்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
அவர் பேசும்போது, இந்திய கட்டிட பொறியியல் துறை மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி, உலக அரங்கில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்&' என்றார். விழாவில், கட்டிட பொறியியல்துறை மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
