தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளைஞர்களை அழைக்கிறது இந்தியக் கடற்படை!

இளைஞர்களை அழைக்கிறது இந்தியக் கடற்படை!

இளைஞர்களை அழைக்கிறது இந்தியக் கடற்படை!


UPDATED : அக் 13, 2011 12:00 AM

ADDED : அக் 13, 2011 02:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2011 12:00 AM ADDED : அக் 13, 2011 02:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* இந்தியக் கடற்படையில், லாஜிஸ்டிக்ஸ் கேடர்(Logistics Cadre), நேவல் ஆர்மமென்ட் இன்ஸ்பெக்ஷன் கேடர்(Naval Armament Inspection Cadre) மற்றும் கல்விப் பிரிவுகளில்(Education Branch) உள்ள பணிகளில் சேர்வதற்கான படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் படிப்புகள் அடுத்த 2012ம் ஆண்டு ஜுன் மாதம் கேரளாவின் எழிமலாவில் உள்ள இந்தியக் கடற்படை கல்வி நிறுவனத்தில்(Indian Naval Academy - INA) நடைபெறவுள்ளன. திருமணமாகாத ஆண்கள் மட்டுமே இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

* லாஜிஸ்டிக்ஸ் கேடர் படிப்பிற்கு 19.5 முதல் 25 வயதுக்குள்ளும், நேவல் ஆர்மமென்ட் இன்ஸ்பெக்ஷன் கேடர் படிப்பிற்கு 19.5 முதல் 25 வயதுக்குள்ளும், கல்விப் பிரிவு படிப்பிற்கு 21 முதல் 25 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

* இந்த 3 வகைப் படிப்புகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்தனி கல்வித் தகுதிகளும், குறைந்தபட்ச மதிப்பெண் வரையறைகளும் உள்ளன.

* இந்தப் படிப்புகளில் சேர, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 3ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப செயல்பாடு தொடங்கி நடந்து வருகிறது. அக்டோபர் 28ம் தேதி விண்ணப்பிக்கும் கடைசி நாளாகும். கேட்டுள்ள விபரங்களுக்கு தெளிவான பதில் கொடுத்து, கவனமாகப் படித்து முழுவதுமாக நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

* ஆன்லைன் விண்ணப்பத்தின் 2 நகல்களைப்(பதிவு எண்ணுடன் கூடிய) பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த விண்ணப்பங்களை சரியாக நிரப்பி, முழுமையாகக் கையெழுத்திட்டு, அவற்றை Post Box No. 02, Nirman Bhawan, New Delhi - 110 023 என்ற முகவரிக்கு சாதாரண தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்ப நகலுடன், சுய கையொப்பமிட்ட புகைப்படம், சான்றளிக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்புகளின் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள், பிற படிப்புகளின் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள்(சான்றளிக்கப்பட்ட - attested) ஆகியவற்றை சேர்த்து அனுப்ப வேண்டும்.

* சாதாரண தபால் தவிர, Speed post, Registered post மற்றும் Courier ஆகியவற்றின் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

* பட்டப்படிப்பில், விண்ணப்பதாரர்களின் செயல்பாட்டை வைத்தே(மதிப்பெண்கள்) நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்படும். சர்விஸ் செலக்ஷன் போர்டு(SSB) நடத்தும் இந்த நேர்முகத் தேர்வானது, அடுத்தாண்டு பிப்ரவரி முதல் மே மாதம் வரையில், பெங்களூர், போபால் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறும். இந்த நேர்முகத் தேர்வுக்கான இடத்தை ஒருவர் மாற்றிக்கொள்ள முடியாது.

* தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், 2012, ஜுன் மாதத்தில், கடற்படையில் துணை லெப்டினன்ட் நிலை அதிகாரியாக பணியமர்த்தப்பட்டு, கேரளாவின் எழிமலையில் கடற்படை தொடர்பான படிப்பு அவர்களுக்கு வழங்கப்படும். அதன்பிறகு, நாடு முழுவதிலுமுள்ள பலவித கடற்படை கப்பல்கள் மற்றும் பயிற்சி மையங்களில் பயிற்சிகள் வழங்கப்படும். இந்தப் பயிற்சியின்போது முழு அளவிலான சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.

* சேர்ந்த நாளிலிருந்து 2 வருடங்கள், ப்ரொபேஷன்(Probation) நிலையிலேயே வைக்கப்படுவர். படிப்பில் சேர்ந்தபிறகு யாருக்காவது திருமணமானது கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது படிப்பின்போது திருமணம் நடந்துவிட்டாலோ, அத்தகைய நபர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார். அந்த நாள் வரை அவர் பெற்ற சம்பளம் மற்றும் ஊக்கத்தொகையினை அவர் திரும்ப செலுத்தியாக வேண்டும்.

* மேற்கண்ட 3 வகைப் பணிகளின் தன்மை, பணியில் கிடைக்கும் சலுகைகள், விதிமுறைகள், விரிவான விண்ணப்பிக்கும் முறைகள், கல்வித் தகுதி விபரங்கள் மற்றும் இன்னபிற தகுதிநிலைகள் ஆகியவைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள http://nausena-bharti.nic.in/ என்ற இணையதளம் செல்க.

குறிப்பு

இந்தியக் கடற்படைப் பணி என்பது ஒரு மதிப்பு வாய்ந்தப் பணியாகும். அந்தப் பணிகளுக்காகவே, மேற்கூறிய இந்தப் படிப்பு தொடங்கப்படுகிறது. நாட்டுக்கு சேவை செய்யும் உணர்வோடு, போதுமான சம்பளம் மற்றும் ஏராளமான சலுகைகளும் இப்பணியில் கிடைக்கிறது. கடற்படை பணியில் பலவிதமான வாழ்க்கை அனுபவங்களுக்கும் பஞ்சமில்லை. எனவே, தகுதியும், திறமையும் உள்ள மாணவர்கள், இந்தக் கடற்படைப் படிப்பிற்கு தயக்கமின்றி விண்ணப்பிக்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us