தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிஎச்.டி.யில் சேரும் மாணவர்களுக்கான வரையறை

பிஎச்.டி.யில் சேரும் மாணவர்களுக்கான வரையறை

பிஎச்.டி.யில் சேரும் மாணவர்களுக்கான வரையறை


UPDATED : அக் 14, 2011 12:00 AM

ADDED : அக் 14, 2011 12:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2011 12:00 AM ADDED : அக் 14, 2011 12:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வார விடுமுறை நாட்களில் முதுகலை பட்டபடிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர முடியுமா என்பது பற்றி முடிவெடுத்து தெளிவுபடுத்த வேண்டும் என்று அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் வார விடுமுறைப் படிப்புத் திட்டத்தின் கீழ் முதுகலை பட்டம் பெற்றிருந்த முத்தமிழன் என்ற மாணவர், சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. சேர விண்ணப்பித்தார்.

ஆனால், வார விடுமுறைப் படிப்புத் திட்டத்தின் கீழ் பட்டம் பெற்றவர்களை பிஎச்.டி.யில் அனுமதிக்க முடியாது என்று கூறி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனை மாணவர் முத்தமிழன் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கு விசாரணையின் போது பல்கலைக்கழகம் சார்பில், குறைந்தபட்சம் எத்தனை மணி நேரம் படிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளதோ, அவ்வளவு மணி நேரத்தை வார விடுமுறை திட்டத்தில் படிப்பவர்களால் படிக்க இயலாது. எனவே, இந்த திட்டத்தின் கீழ் படித்தவர்களை பிஎச்.டி. படிப்பில் அனுமதிக்க முடியாது என்று பதிலளிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, வார விடுமுறை நாட்களில் முதுகலை படித்தவர்களை பிஎச்.டி. படிப்பில் சேர்க்க முடியுமா அல்லது முடியாதா என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் பல்கலைக்கழகத்திற்கு உள்ளது.

எனினும், இது பற்றி சேர்க்கை தொடங்குவதற்கு முன்பே விவரமாக தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். எனவே இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் உரிய முடிவெடுத்து அடுத்த மாணவ சேர்க்கை நடைபெறும் 2012 ஜனவரி மாதத்திற்குள் தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us