தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாசற்ற தீபாவளி; மிளிரட்டும் தீபஒளி

மாசற்ற தீபாவளி; மிளிரட்டும் தீபஒளி

மாசற்ற தீபாவளி; மிளிரட்டும் தீபஒளி


UPDATED : அக் 25, 2011 12:00 AM

ADDED : அக் 25, 2011 03:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2011 12:00 AM ADDED : அக் 25, 2011 03:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆனால், அதன் சில நடைமுறைகள் சமகால மனிதருக்கும், வருங்காலச் சந்ததியினருக்கும் ஆபத்து விளைவிக்கும் என்றால், அந்நடைமுறைகளை மாற்றுவதில் தவறில்லை.

பண்டிகையைக் கொண்டாட்டத்துக்கான ஒரு நிகழ்வாக மட்டுமே பார்த்துவிட்டுப் போகும் தலைமுறை அல்ல நாம். அப்பண்டிகையின் வெவ்வேறு பரிமாணங்களையும் பார்க்க வேண்டி இருக்கிறது. மற்ற பண்டிகைகளைப் போலன்றி, தீபாவளியின் சிறப்பம்சம் வாணவேடிக்கையுடன் இணைந்திருப்பதே. பட்டாசுகள் அப்போதைக்கு மகிழ்ச்சியைத் தரலாம். அவை ஏற்படுத்தும் சூழல் மாசுபாடு மிகவும் அபாயகரமானது. பல்வேறு சூழல் ஆர்வலர்களும் "பட்டாசு வேண்டாம்; தீபங்களை ஏற்றுவோம்" என்ற கோஷத்துடன் விழிப்புணர்வை முன்னெடுத்துள்ளனர்.

பட்டாசு வெடிப்பதன் அபாயகரமான மறுபக்கம் பற்றி, ஆஸ்த்துமா மற்றும் ஒவ்வாமை சிறப்பு மருத்துவரான ஸ்ரீதரனிடம் பேசியதிலிருந்து...

நவ-டிச., சீசனில் பொதுவாகவே ஆஸ்துமா, சளி, இருமல், நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் அதிகமாக இருக்கும். மழை, காற்றில் ஈரப்பதம், மகரந்தம், காளானில் இருந்து பரவும் நுண்அணுக்கள் போன்றவை ஆஸ்துமா, ஒவ்வாமை(அலர்ஜி)க்கான காரணிகளாக அமைகின்றன.

இவை மூச்சு வழியாக உட்சென்று மூச்சுக்குழல் பாதிப்பு, சளி, சைனஸ், சுவாசம் தொடர்பான பிரச்னைகளை உருவாக்குகின்றன. இப்பருவத்தில்தான் தீபாவளிப் பண்டிகையும் வருகிறது. பட்டாசில் கந்தகம், நைட்ரேட் போன்றவற்றுடன் காப்பர், மெர்க்குரி, அமோனியம் போன்ற உலோகங்களும் சேர்க்கப்படுகின்றன. பட்டாசு வெடித்து, அவற்றில் உள்ள இம்மூலக்கூறுகள் காற்றில் பரவி, சுவாசக்காற்றில் கலக்கின்றன. இதனால்,  ஆஸ்துமா இருப்பவர்கள் மேலும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சிலருக்கு புதிதாக ஏற்படும் அபாயமும் உண்டு. இந்த ரசாயனங்கள் சுவாசத்தின் வழியாக உட்செல்லும் போது  எரிச்சல், அழற்சி, சைனஸ்,தொண்டைக் கரகரப்பு, நோய்த்தொற்று, கண் அரிப்பு, மூச்சுக்குழல் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு என, பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமாகின்றன.

வாசனையை அறிவதில் குறைபாடு; சைனஸ் காரணமாக தலைவலி, காய்ச்சல்; கண் உறுத்தல், நீர்வடிதல்; மூச்சுக்குழல் சுருக்கம், வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஆஸ்துமாவுக்கான அனைத்து அறிகுறிகளையும் உருவாக்கும். இவை தொடர்ந்தால் நுரையீரல் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பும் உண்டு. பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. பட்டாசு வெடிக்கையில் திடீரெனக் கேட்கும் அதீத ஒலி, கேட்கும் திறனைப் பாதிக்கலாம். பட்டாசு வெடிக்கும் போது உருவாகும் வெம்மை, புவி வெப்பமடைதலை அதிகரிக்கிறது. கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்றவை காற்றுமண்டலத்தை அசுத்தப்படுகின்றன. மழைப் பொழிவு பாதிக்கிறது.

பனிமலைகளில் மீது படியும் கார்பன் படிவங்கள், சூரிய ஒளியை எதிரொலிப்பதற்குப் பதில், கிரகிக்கின்றன. வெப்பத்தால், பனி உருகி கடல் நீர் மட்டம் உயர்கிறது. சங்கிலித் தொடர் விளைவாக உயிர்ச்சூழல் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பட்டாசுத் தொழிற்சாலை விபத்துகளில் வளரிளம் பருவத்தினர் உயிரிழப்பதும், அங்கஹீனமாவதும் நாகரிக சமூகத்துக்கு அழகல்ல. தொடர்ச்சியாக அங்கு பணிபுரிபவர்கள் பல்வேறு உடல்உபாதைகளுக்கு உற்பட்டு, நிரந்தர நோயாளிகளாகி விடுகின்றனர்.

ஒரு நாள் மகிழ்ச்சிக்காக நிரந்த சூழல் கேட்டை உருவாக்குகிறோம். எனவே, தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்ப்போம். தீபாவளி என்ற பெயருக்கு ஏற்ப, வண்ணத் தீபங்களை வரிசையாக ஏற்றி மகிழ்வோம்.

இவ்வாறு, ஸ்ரீதரன் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us