தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொது இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனில் பணியிடங்கள்

பொது இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனில் பணியிடங்கள்

பொது இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷனில் பணியிடங்கள்


UPDATED : அக் 28, 2011 12:00 AM

ADDED : அக் 28, 2011 12:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2011 12:00 AM ADDED : அக் 28, 2011 12:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் இயங்கும் தேசியமயமாக்கப்பட்ட பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை நிர்வகிக்கும் அமைப்பான இந்திய பொது இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற ஜி.ஐ.சி., நிறுவனத்தைப் பற்றி நாம் அறிவோம். இந்த நிறுவனத்தில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பிரிவில் மொத்தம் 50 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரிவுகள்:
ஜி.ஐ.சி., நிறுவனத்தில் இன்ஸ்யூரன்ஸ், மரைன், மெக்கானிகல், ஏரோனாடிகல், கெமிக்கல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், ரிசர்ச் அண்டு டெவல்ப்மென்ட், மெடிக்கல், மார்க்கெட்டிங், என்டர்பிரைஸ் மேனேஜ்மென்ட், ஐ.டி., சாப்ட்வேர், ஐ.டி., ஹார்டுவேர், நிதி மற்றும் கணக்கியல், எச்.ஆர்.டி., சட்டம், சிவில் இன்ஜினியரிங், பப்ளிசிட்டி ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

தேவைகள்:
ஜி.ஐ.சி., நிறுவனத்தின் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி தனித்தனியாக குறைந்தபட்ச கல்வித் தகுதி தேவைப்படுகிறது. விபரங்களை இணையத்தில் அறியவும்.

எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு சென்னை உள்ளிட்ட நாட்டின் 4 மையங்களில் 04.12.2011 அன்று நடத்தப்படும் என்று தெரிகிறது.

இதர விபரங்கள்:
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.500/க்கான டி.டி.,யை General Insurance Corporation of India என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். ஆன்லைனிலேயே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் பதிவு என்பதால் உங்களுக்கான உபயோகத்தில் உள்ள இமெயில் முகவரி இருப்பது கட்டாயத் தேவையாகும். ஆன்லைனில் பதிவு செய்தபின்னர் கிடைக்கும் பதிவுத்தாளில் உங்கள் புகைப்படத்தை ஒட்ட வேண்டும். விண்ணப்பிப்பது குறித்த முழுமையான தகவலுக்கு இந்த நிறுவனத்தின் இணையதளத்தைக் கட்டாயம் பார்க்கவும்.

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள்: 05.11.2011
ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் பதிவுத்தாளை அனுப்ப இறுதி நாள்: 14.11.2011
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 04.12.2011

இணையதள முகவரி: http://gicofindia.com/Downloads/GIC_Re-Recruitment.pdf

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us