UPDATED : நவ 01, 2011 12:00 AM
ADDED : நவ 01, 2011 01:25 PM
பி.டெக். படிப்பில் சேரும் மாணவர்களுக்கான அகில இந்திய சேர்க்கைக்கான தேர்வு (ஐசாட் 2012) வரும் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதியன்று இந்தியா முழுவதும் 22 நகரங்களில் நடைபெற உள்ளது.
வான்வெளித் துறையில் பட்டப்படிப்புகளை அளிக்கும் ஐஐஎஸ்டி கல்வி நிறுவனத்தில் 2012ம் கல்வியாண்டில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், அவியோனிக்ஸ் மற்றும் பிசிகல் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.டெக். படிப்பில் சேர இந்த ஐசாட் தேர்வு நடத்தப்படுகிறது.
ஐசாட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நவம்பர் 1ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் மாதம் 31ம் தேதி இரவு 11.30 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி செயல்படும்.
ஐசாட் இணையதளத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மாணவர்கள் படித்து தெரிந்து கொள்வது அவசியம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்யத் துவங்குவதற்கு முன்பு விதிமுறைகளை படிக்க வேண்டியது அவசியமாகும்.
தேர்வெழுதும் பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் 600 ரூபாயாகும். எஸ்.சி., எஸ்.டி. மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.300 கட்டணமாகும். தேசிய வங்கிகளில் தேர்வுக் கட்டணத்தை செலுத்தி செல்லான் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.iist.ac.in/isat2012 இணையதளத்தைப் பார்க்கவும்.
