UPDATED : நவ 01, 2011 12:00 AM
ADDED : நவ 01, 2011 05:31 PM
சென்னை: இந்திய மேலாண்மை படிப்புகளில், புதிய அம்சங்களை சேர்க்க, ஐ.ஐ.எம். -கள் திட்டமிட்டு வருகின்றன.
இந்திய மேலாண்மை படிப்புகளில், தற்போது உள்ள அம்சங்கள், கேஸ் ஸ்டடி(case study) மற்றும் பழைய பாரம்பரிய முறைகளிலேயே உள்ளன. எனவே, இருக்கும் பாடத்திட்டத்தில், புத்தாக்க, படைப்பாக்க மற்றும் தலைமைத்துவ அம்சங்களை புகுத்துவதுடன், மேற்சொன்ன அம்சங்கள் தொடர்பாக புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கேஸ் ஸ்டடி மற்றும் பாரம்பரிய முறையிலான பாடத்திட்டங்கள் குறுகிய எல்லையைக் கொண்டவை. இதனால், ஒருவரின் பரந்துபட்ட சிந்தனைத்திறன் முடக்கப்படுவதோடு, புதிய முயற்சிகளுக்கும் தடை ஏற்படுகிறது என்று ஐ.ஐ.எம். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய முயற்சிகள் பற்றி விவாதிக்க, தொடர்ச்சியாக 5 மாநாடுகள் தேசிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளன. 100 வணிகப் பள்ளிகள் இவற்றில் கலந்துகொள்ள உள்ளன. தமிழக அளவில், இவற்றில் 1 மாநாடு சென்னையிலும், 1 மாநாடு கோவையிலும் நடைபெறவுள்ளது.
இருக்கும் பாடத்திட்டங்களை முழுமையாக மாற்றும் திட்டத்தையும் மறுப்பதற்கில்லை என்று ஐ.ஐ.எம். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
