தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்விக்காக வெளிநாட்டினர் வருவது பெருமையே

கல்விக்காக வெளிநாட்டினர் வருவது பெருமையே

கல்விக்காக வெளிநாட்டினர் வருவது பெருமையே


UPDATED : நவ 02, 2011 12:00 AM

ADDED : நவ 02, 2011 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2011 12:00 AM ADDED : நவ 02, 2011 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: "இளைய சமுதாயம், மேலை நாடுகளின் கல்விக்காக கடல் கடந்து செல்லும் காலம் மாறி, வெளிநாட்டினர் கல்வி கற்க இந்தியா வருவது நமக்கு பெருமையே" என, பிஷப் அப்பாசாமி கலை அறிவில் கல்லூரி முதல்வர் மிராலினி பேசினார்.

சி.எஸ்.ஐ., பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி சார்பில், இந்திய கல்வி முறையை கற்க வந்த அமெரிக்க மாணவ, மாணவியரின் கல்வி நடைமுறையை விளக்கும் நிகழ்ச்சி, கல்லூரி அரங்கில் நடந்தது.

கல்லூரி முதல்வர் மிராலினி கூறியதாவது: அமெரிக்காவில் உள்ள கிறிஸ்தவ கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் அமைப்பில் உறுப்பினராக உள்ள, பல்வேறு அமெரிக்க பல்கலைகளைச் சேர்ந்த 12 மாணவ, மாணவியர், இந்திய கலாசாரம் மற்றும் கல்வி முறையை அறிந்து கொள்ள இந்தியா வந்துள்ளனர். பிஷப் அப்பாசாமி கல்லூரி மேற்குறிப்பிட்ட அமைப்பில் உறுப்பினராக உள்ளதால், எங்கள் கல்லூரியில் இப்பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

அவர்களுக்கான கல்வி நடைமுறை ஐந்து பிரிவுகளாக தனித்துவத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் சமூக சேவை, விஷுவல் கம்யூனிகேசன் உள்ளிட்ட பாடத்திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. படிப்பு தவிர மசனக்குடி, மாமல்லபுரம், காஞ்சிபுரம், கொச்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட நமது கலாசாரங்கள் பிரதிபலிக்கும் முக்கிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். நண்பர்கள் வீட்டில் சில நாள் தங்க வைக்கப்படுகின்றனர்.

இதன் மூலம் தென்னிந்திய கலாசாரங்கள் குடும்ப உறவுகள் பற்றி அறிய முடியும். மொத்தமாக நடக்கும் 12 வார வகுப்பில் இந்திய சமய வரலாறு, ஆடை வடிவமைப்பு, கலைகள், இலக்கியம், சமூகவியல், வணிகம் மற்றும் சமையல் உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன. வகுப்புகள் முடிவில் நடக்கும் தேர்வுகளுக்கு பின், வட இந்தியா சென்று பாரம்பரியங்களை அறியவுள்ளனர்.

இப்படிப்பு மூலமாக அவர்கள் நமது கலாசாரத்தின் மேன்மையை உணர்வதோடு, இரு நாட்டு கலாசாரங்களுக்கும் பாலமாக இருக்க வாய்ப்புண்டு. இளைய சமுதாயம் கடல் கடந்து மேலை நாடுகளின் கல்விக்காக செல்லும் காலம் மாறி, வெளிநாட்டினர் கல்வி கற்க இங்கு வருவது நமக்கு பெருமையே என அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us