UPDATED : நவ 07, 2011 12:00 AM
ADDED : நவ 07, 2011 12:13 PM
அ நிறம் | அளவு
கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலையின் 32வது பட்டமளிப்பு விழா, வரும் 23ம் தேதி மாலை 4.30 மணிக்கு, பல்கலை பட்டமளிப்பு அரங்கில் நடக்கிறது. கவர்னர் ரோசய்யா தலைமை வகிக்கிறார்.
வேளாண்மைத் துறை அமைச்சர் தாமோதரன் பரிசுகளையும்
, பதக்கங்களையும் வழங்குகிறார். டில்லியிலுள்ள மத்திய அரசின் திட்டக்குழு உறுப்பினர் கஸ்தூரி ரங்கன், சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.விழாவில்
, ஆந்திர அரசின் வருவாய், நிவாரணம் மறுவாழ்வு-நகர்ப்புற நில உச்சவரம்புத் துறை அமைச்சர் ரகுவீர ரெட்டி, சென்னையிலுள்ள ஆரூரான் சர்க்கரை நிறுவன தலைவர் தியாகராஜன் கவுரவ பட்டம் பெறுகின்றனர். விழாவில், 678 மாணவர்கள் நேர்முகமாகவும், 284 மாணவர்கள் தபால் மூலமாகவும் பட்டங்களைப் பெற உள்ளனர். இத்தகவலை, தமிழ்நாடு வேளாண் பல்கலை பதிவாளர் சுப்பையன் தெரிவித்தார்.