தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி பெறலாம்

தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி பெறலாம்

தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி பெறலாம்


UPDATED : நவ 09, 2011 12:00 AM

ADDED : நவ 09, 2011 09:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2011 12:00 AM ADDED : நவ 09, 2011 09:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்தூர் அருகே உள்ள தேவியாக்குறிச்சி, தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி., சைலேந்திரபாபு, தன்னம்பிக்கை என்ற தலைப்பில் பாடம் நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது: நான், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவனந்தபுரம் என்ற குக்கிராமத்தில் பிறந்தேன். எனது பெற்றோர் வறுமையில் இருந்தபோதும், என்னை படிக்க வைத்தனர். பள்ளி பருவத்திலேயே ஐ.பி.எஸ்., அதிகாரியாக வர வேண்டும் என்று படித்தேன். பெற்றோரின் நிலை உணர்ந்து, வைராக்கியத்துடன் படித்ததால், ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, இன்று ஐ.ஜி.யாக பணிபுரிந்து வருகிறேன். என் பள்ளி நண்பர் ஒருவர், படிக்கும்போதே லாரி டிரைவராக செல்வேன் என்றார்.

அதேபோல், லாரி டிரைவராக சென்றார். படிக்கும் வயதில், நாம் என்ன ஆவோம் என நினைத்து, லட்சியத்துடன் படித்தால், வெற்றி இலக்கை எளிதில் அடைய முடியும். பொதுத்தேர்வு எழுதும், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ்2 மாணவ, மாணவியர், பாடப்புத்தகம் மட்டுமின்றி, பொது அறிவு புத்தகங்களையும் படிக்க வேண்டும். இரவில் தூங்கச் செல்லும்போது, இன்று படித்ததை ஒருமுறை நினைவு கூர்ந்தால், பாடம் மறதியாகாது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., எம்.பி.பி.எஸ்., பி.இ., போன்ற உயர் படிப்புகள் படிக்க வேண்டும். நம் பெற்றோர் எந்த சூழ்நிலையில் படிக்க வைக்கின்றனர் என்று மனதில் வைத்துக் கொண்டு, சிந்தனைகளை தவறான வழிகளில் சிதற விடாமல், தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால், எந்த தேர்வானாலும் அதில் வெற்றி பெற முடியும் என்று பேசினார். பள்ளி நிர்வாகி பழனிவேல், ஆத்தூர் டி.எஸ்.பி., மாணிக்கம், தலைவாசல் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us