UPDATED : செப் 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மந்தமான துறை வளர்ச்சி மற்றும் அதிகரிக்கும் விமானப் பயண டிக்கெட்டுகள் ஆகியவற்றைத் தாண்டி இத்துறையில் வேலை வாய்ப்புகள் பெருகி வருவதாக கியோனி அகாடமி ஆப் டிராவல் தெரிவித்துள்ளது.
பிரிட்டனிலுள்ள கேபின் க்ரூ டைரக்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த அகாடமி சமீபத்தில் ஒரு புதிய 4 மாத டிப்ளமோ படிப்பை துவக்கியுள்ளது. இந்த படிப்பானது பன்னாட்டு விமான நிறுவனங்கள் சிலவற்றின் ஒத்துழைப்போடு நடத்தப்படுகிறது.
பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஒரு கணிப்பின்படி அடுத்த சில ஆண்டுகளில் உலக விமானச் சேவையை முன்னெடுத்துச் செல்வது இந்தியாவாகத்தான் இருக்கும் என கூறியுள்ளது.
ரூ.21 ஆயிரம் கோடி வணிகத்தைக் கொண்டுள்ள இந்திய விமானத் துறையில் அடுத்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டும் என்றும் இது கூறியுள்ளது. கேபின் பணிக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் கிடைக்கும் திறனாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இது பன்னாட்டு அளவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இந்தியாவிலும் இது உணரப்படுகிறது.
சர்வதேச அளவில் இந்தியர்கள் இந்தப் பணிகளுக்கு மிகவும் விரும்பப்படுகிறார்கள். சிறப்பான கல்வியை அவர்கள் பெற்றிருப்பதால் அவர்களுக்கான தேவை அதிகம் இருக்கிறது.
ஆங்கிலம் தாய் மொழியல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்களில் இந்தியர்கள் தான் மிகச் சிறப்பாக ஆங்கிலம் பேசுபவர்களாக இருப்பதும் இதற்கு மற்றொரு காரணம். சக மனிதர்களிடம் நட்பாகப் பழக முடிவது, எளிய அணுகுமுறை மற்றும் அடிப்படையிலேயே அவர்கள் திறமையானவர்களாக இருப்பது ஆகிய காரணங்களால் இந்தியர்கள் விமானச் சேவைத் துறையில் விரும்பப்படுவதில் ஆச்சரியமில்லை.