தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வில் முறைகேடா?

கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வில் முறைகேடா?

கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வில் முறைகேடா?


UPDATED : அக் 15, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
‘கம்ப்யூட்டர் ஆசிரியர் சிறப்புத் தேர்வில் தேர்ச்சி பெற திடீரென, 35 சதவீத மதிப்பெண்களாக குறைத்து நிர்ணயித்து, தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன்?’ என்று தமிழ்நாடு கம்ப்யூட்டர் சயின்ஸ் பி.எட்., பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:
பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு 15 ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருக்கிறோம். அரசு மேல்நிலைப் பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனத்தில் எங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் எனக் கேட்டு வருகிறோம். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு சிறப்புத் தேர்வு நடத்தி அவசரம், அவசரமாக 7 மணி நேரத்தில் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். ‘50 சதவீத மதிப்பெண் பெறுபவர்கள் பணி நியமனம் செய்யப்படுவர்’ என ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அப்படியிருக்கும்போது திடீரென 35 சதவீத மதிப்பெண்களை நிர்ணயித்து தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன்?
சிறப்புத் தேர்வு நடத்துவதற்கு முன், எத்தனை மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்துகிறோம், வெற்றி பெற எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் போன்ற விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், வெளியிடவில்லை. இதன் பின்னணியில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். 50 சதவீதத்துக்கு குறைவாக பெற்ற 792 பேர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அரசின் தற்போதைய நடவடிக்கைகளால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் சான்றிதழ்களை அரசிடம் திருப்பி ஒப்படைப்போம். இவ்வாறு செல்வராஜ் கூறினார்.
மிகக் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை நிர்ணயித்து, தேர்வு முடிவுகளை வெளியிட்டது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ராமையாவிடம் கேட்டபோது, ‘தமிழக அரசு 50 சதவீத மதிப்பெண்களை நிர்ணயித்தது எனக்குத் தெரியாது. 35 சதவீத மதிப்பெண்களை நிர்ணயம் செய்து, தேர்வு முடிவுகளை வெளியிட்டதில் என்ன தவறு இருக்கிறது? பலரும் வேலை வாய்ப்பு பெற்றிருக்கின்றனர். தேர்ச்சி பெறுவதற்கு 35 சதவீத மதிப்பெண்கள் போதும் என்று சமீபத்தில் தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us