தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி வகுப்பறைக்கு அண்ணாதுரை பெயர்

பள்ளி வகுப்பறைக்கு அண்ணாதுரை பெயர்

பள்ளி வகுப்பறைக்கு அண்ணாதுரை பெயர்


UPDATED : நவ 10, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


பொள்ளாச்சி:
‘பள்ளிகளில் நடப்பாண்டில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களுக்கு, அண்ணாதுரை பெயர் சூட்ட வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக  எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
ஆண்டுதோறும் வகுப்பறை பற்றாக்குறை நிலவும் பள்ளிகளுக்கு, குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்பட்டு, கட்டட வசதி அளிக்கப்படுகிறது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல பெரும்பாலும் மூன்று வகுப்பறை கட்டடம் அளிக்கப்படுகிறது.
அப்போது, வகுப்பறை கட்ட ஒதுக்கப்பட்ட நிதி, கட்டப்பட்ட ஆண்டு போன்ற தகவல்களுடன், ‘அனைவரும் கல்வி இயக்கம்’ என்ற பெயரும் தகவல் பட்டியலில் இதுவரை தெரிவிக்கப்பட்டது. தற்போது,  அண்ணாதுரை நூற்றாண்டு விழா நினைவு தினத்தை முன்னிட்டு, புதிதாக பள்ளிகளில் கட்டக்கூடிய வகுப்பறை கட்டடங்களுக்கு, அண்ணாதுரை பெயரை சூட்டுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து, கல்விக்குழு கூட்டங்கள் மூலமாகவும் பொதுமக்களிடமும் அறிவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us