தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.எம்., ஆமதாபாத் நடத்திய பயிற்சி

ஐ.ஐ.எம்., ஆமதாபாத் நடத்திய பயிற்சி

ஐ.ஐ.எம்., ஆமதாபாத் நடத்திய பயிற்சி


UPDATED : நவ 22, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நிர்வாகவியல் படிப்புகளில் இந்தியாவில் பிரசித்தி பெற்ற நிறுவனமாக திகழ்வது ஐ.ஐ.எம்., ஆமதாபாத். இந்த கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவர்களில் பலர் இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் பல்வேறு இடங்களில் தலைசிறந்த பதவி வகிக்கின்றனர்.
நிர்வாகவியல் படிப்புகளில் தலைசிறந்த இந்நிறுவனம் 1979ம் ஆண்டிலிருந்தே நிர்வாகவியல் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கென்று சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சிகள் போகல்டி டெவலப்மென்ட் புரோகிராம் (எப்.டி.பி.,) என்ற பெயரில் அழைக்கப்
படுகின்றன.
இந்த பயிற்சி வகுப்புகளில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஆசிரியர்கள் பங்குபெற்று, அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றனர். இந்நிகழ்ச்சிகளில் ஆசிரியர், ஆராய்ச்சியாளர், பயிற்சியாளர், தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்கள் உட்பட பல தரப்பினரும் பங்குகொள்கின்றனர்.
சமீபத்தில் இத்தகைய எப்.டி.பி., புரோகிராமை ஆமதாபாத்தில் இக்கல்வி நிறுவனம் நடத்தியது. இதில், 37 பேர் பங்குபெற்றனர். இந்த பயிற்சி முகாம் பற்றி திருப்தி தெரிவித்த அவர்கள் இதுபோன்ற பயிற்சி முகாமில் மீண்டும் மீண்டும் பங்குபெற விரும்புவதாக தெரிவித்தனர்.
இதன்மூலம் இப்பயிற்சி முகாமின் வெற்றியை உணர முடிகிறது. 16 வாரங்கள் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் பங்குபெற்ற மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களைச் சார்ந்த ஆசிரியர்கள் பயிற்சி முகாமின் முக்கிய அம்சங்களான பயிற்சித்தரம், பாடப்பகுதி, எழுத்தாற்றல் வளர்க்கும் பயிற்சி, தகவல்களை ஆய்வு செய்தல் போன்றவற்றை பற்றி புகழ்ந்துள்ளனர். இங்கு பயிற்சி பெற்ற நேபாளம், மாலத்தீவை சேர்ந்த பயிற்சியாளர்களும் இப்பயிற்சி முகாமின் கூடுதல் உபயோகங்களான கலாசார அறிமுகம், தரமான பயிற்சி போன்றவற்றை புகழ்ந்துள்ளனர்.
இப்பயிற்சியில் நிதி, மார்க்கெட்டிங், மனித வளம் போன்ற நிர்வாகவியலின் வெவ்வேறு புலங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் ஒருங்கே பயிற்சி பெற்றதும், பல்வேறு தயாரிப்புகளை வெளியிட்டதும் கல்விப்பிரிவில் மணி மகுடமாக இருப்பதாக ஐ.ஐ.எம்., ஆமதாபாத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us