UPDATED : நவ 22, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நிதி தொடர்புடைய சேவைத்துறையில் சில்லறை வங்கிச்சேவை, புரோகரேஜ், அசெட் அண்டு வெல்த் மேனேஜ்மென்ட், கார்ப்பரேட், அண்டு இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் புராடக்ட்ஸ் அண்டு சர்வீசஸ் போன்ற பிரிவுகளில் பிரசித்தி பெற்ற நிறுவனமாக திகழ்வது ‘வாக்கோவியா’ நிறுவனமாகும்.
இது சமீபத்தில் அமெரிக்காவின் பிரசித்திபெற்ற நிதி தொடர்புடைய சேவை நிறுவனமாகிய ‘வெல்ஸ் பார்கோ’ வுடன் இணைந்துவிட்டது. இதன் காரணமாக இந்தியாவில் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பணியிழக்கும் நிலை தோன்றியுள்ள வாக்கோவியா நிறுவனம் இந்தியர்களைத் தனது நிதி தொடர்புடைய அவுட்சோர்சிங் பணிகளுக்கு உபயோகித்து வந்தது.
சென்னையில் உள்ள சென்டா நாலெட்ஜ் பிராசசிங் சர்வீஸ் இதன் அவுட்சோர்சிங் பணிகளில் முக்கியப்பங்கு வகித்து வந்தது. இதே போல் ஜென்பாக்ட் நிறுவனமும் வாக்கோவியா நிறுவனத்தில் முக்கிய அங்கமாக திகழ்ந்து வந்துள்ளது. சென்டாவில் 1000க்கும் அதிகமான இந்தியர்களும் ஜெப்பாக்டில் 250 ஊழியர்களும் வாக்கோவியா நிறுவனத்திற்கான அவுட்சோர்சிங் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்துள்ளனர்.
ஏற்கனவே வெல்ஸ் பார்கோவில் 650 பேர் பணியில் உள்ள நிலையில் அவர்களுக்கே போதுமான பணிகள் இல்லை. இதனால் இந்த இணைப்பின் மூலம் பலர் உபரியாகும் நிலை உள்ளது. ஜென்பாக்டில் உள்ள 250 பேரின்பணி ஓரளவு பாதுகாப்பாக உள்ள நிலையில் வாக்கோவியாவில் நடத்தப்பட உள்ள பணி பறிப்பின் காரணமாக அங்கு பணிபுரியும் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
