UPDATED : ஆக 10, 2013 12:00 AM
ADDED : ஆக 10, 2013 08:56 AM
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள், 100 பேருக்கு, இலவச ஊடக பயிற்சியும், 100 பேருக்கு புகைப்பட பயிற்சியும், அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 16 முதல், 40 வயதுக்கு உட்பட்ட, மாற்றுத்திறனாளிகள், பயிற்சி பெற தகுதி உடையவர்கள். பயிற்சி காலத்தில், மாதம், 1,000 ரூபாய் ஊக்கத் தொகையும், விடுதி வசதியும் வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள், விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி சான்று நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன், பெயர் மற்றும் முகவரி, கல்வித்தகுதி, மாற்றுத்திறன் தன்மை மற்றும் அதன் சதவீதம், விடுதி வசதி தேவையா என்ற விவரம், தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன், அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு, இம்மாதம், 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
