தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கண்துடைப்பா குழந்தை தொழிலாளர் கணக்கெடுப்பு?

கண்துடைப்பா குழந்தை தொழிலாளர் கணக்கெடுப்பு?

கண்துடைப்பா குழந்தை தொழிலாளர் கணக்கெடுப்பு?


UPDATED : டிச 16, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை மாவட்டத்தில் 825 பேர் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது, ‘கோவை கிளாஸ்’ நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டத்திலுள்ள பல பேக்கரி, டீக்கடை, ஓட்டல், ஜவுளி நிறுவனங்களில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர் அதிகளவில் பணியில் அமர்த்தப்படுகின்றனர். கோவை நகரிலுள்ள சில தங்கப்பட்டறைகளில் வடமாநிலத்தைச் சேர்ந்த குழந்தை தொழிலாளர் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களை மீட்டு, பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை ‘கோவை கிøளாஸ்’ அமைப்பு செய்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான குழந்தைகளை மீட்டு, பள்ளியிலும், பெற்றோரிடமும் ஒப்படைத்துள்ளது. படிக்க ஆசையிருந்தும் ‘குடும்ப வறுமை’யால், வேலைக்கு வரும் குழந்தைகள், மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சில நாட்களில் மீண்டும் வேறு பகுதியிலுள்ள கடைகளில் வேலைக்கு சேர்க்கப்படும் அவல நிலை இன்னமும் நீடிக்கிறது.
குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; ஆனால், வேலைக்கு அமர்த்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனாலும், குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்துவது அதிகமாகவே உள்ளது. அதிக நேர உழைப்பு, குறைந்த சம்பளம் மட்டுமே குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்த முக்கிய காரணம்.
கோவை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது என புகார் எழுந்ததால், மாவட்டம் முழுவதும் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மற்றும் அரசு பணியாளர்களைப் பயன்படுத்தி குழந்தை தொழிலாளர் கணக்கெடுப்பு பணி, சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்டது.
இக்கணக்கெடுப்பில், கோவை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் 825 பேர் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது பட்டியலில் இடம்பெற்றுள்ள குழந்தை தொழிலாளரை மீட்க தனிக்குழு அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் ரகசியமாக, அதிரடி மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளை பணிக்கு அமர்த்தியவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கண்துடைப்பு:
மாவட்டத்திலுள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பதே உண்மை. குழந்தை தொழிலாளர் கணக்கெடுப்புக்கு சென்ற என்.எஸ்.எஸ்., மாணவர்கள், பலரை தொழில் நிறுவனங்கள் பல உள்ளே அனுமதிக்கவில்லை.
நிர்வாகத்தினர் கூறிய கருத்துக்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுபோல், அடுக்குமாடி குடியிருப்புகளில் சிலவீடுகளில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த குழந்தை தொழிலாளரை வீட்டிற்குள் சென்று பார்த்தால் மட்டுமே கணக்கெடுப்பு என்பது முழுமையானதாக இருக்கும்.
ஆனால், பல அடுக்குமாடி குடியிருப்புக்குள் கணக்கெடுக்க சென்றவர்களுக்கு அனுமதியே கிடைக்கவில்லை என்பதே உண்மை. இதனால், இந்தக் கணக்கெடுப்பு நூறு சதவீதம் முழுமையானதா என்பதை உறுதிபடுத்த வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு உண்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us