தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணாமலை பல்கலையில் மாணவர்கள் போராட்டம்

அண்ணாமலை பல்கலையில் மாணவர்கள் போராட்டம்

அண்ணாமலை பல்கலையில் மாணவர்கள் போராட்டம்


UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM

ADDED : ஜூலை 22, 2014 12:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM ADDED : ஜூலை 22, 2014 12:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்: கல்வி உதவித் தொகை வழங்க வலியுறுத்தி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கல்விக் கட்டண அபராதம் இல்லை என்ற அரசாணையை நிறைவேற்ற வேண்டும், அரசு கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும், கல்வி தரத்தை மேம்படுத்த உரிய பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும், பொறியியல் பிரிவில் 5 சதவீத மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

சி.சி. மற்றும் டி.சி. பெற 400 ரூபாய் கட்டணம் பெறுவதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துத் துறையை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து பூமா கோவில் அருகே காலை 10:00 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் டி.எஸ்.பி. ராஜாராம், அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், மீனா, கலைப்புல முதல்வர் ராஜேந்திரன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் ராஜா ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி சென்னை சென்றுள்ளதால் வந்தவுடன் நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவர்கள் ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர். மாலை 4:00 மணி வரை போராட்டம் நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us