தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துவக்கப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது

துவக்கப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது

துவக்கப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது


UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM

ADDED : ஜூலை 22, 2014 12:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2014 12:00 AM ADDED : ஜூலை 22, 2014 12:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொப்பம்பட்டி: பழநி அருகேயுள்ள கந்தப்பகவுண்டன் வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பத்துமாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்.

தொப்பம்பட்டி ஒன்றியப்பகுதிகளில் புதிதாக ஆரம்பிக்கப்படும் தனியார் மெட்ரிக் பள்ளிகள், நர்சரி, பிரைமரி பள்ளிகள் காரணமாக அரசு துவக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு வெகுவாக குறைந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளான கந்தப்பன்வலசு, வண்ணாபட்டி, சின்னமொட்டனூத்து, ஆலவலசு, குமாரசாமிகவுண்டன் வலசு, வட்டமலைபுதூர் போன்ற இடங்களிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்துவரை படிக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 20 க்கும் குறைவாக உள்ளது.

இதில் குறிப்பாக கந்தப்பகவுண்டன் வலசு துவக்கப்பள்ளியில் ஒரு தலைமையாசிரியர், இடைநிலை ஆசிரியர் என இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஒன்று முதல் ஐந்து வரை பத்து மாணவர்கள் மட்டுமே பயிலுகின்றனர். இதேநிலை நீடித்தால் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் அரசு பள்ளிகளை இழுத்து மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இதுகுறித்து தொடக்க கல்விதுறை அதிகாரிகள் கூறுகையில், "நகரைத்தொடர்ந்து கிராமப்புற மக்களும் தங்கள் குழந்தைகளை இரண்டு வயது முதலே எல்.கே.ஜி., யு.கே.ஜி.யில் சேர்த்துவிடுகின்றனர். ஆனால் அரசுப்பள்ளியில் ஐந்து வயதில் தான் சேர்க்க முடியும். அதற்கு கீழ் உள்ளவர்களை அங்கான்வாடியில் சேர்க்கலாம்.

அங்கன்வாடி மையங்களில் தனியார் நர்சரி, பிரைமரி பள்ளி அளவிற்கு பாடம் சொல்லி தருவது கிடையாது. நிலைமை இப்படி உள்ளதால், ஆரம்ப கட்டத்தில் தனியார் பள்ளியை நாடும் பெற்றோர், பின்னர் தங்கள் குழந்தைகளை தொடர்ந்து அப்பள்ளியிலேயே படிக்க வைக்கின்றனர். இதன்காரணமாக தொடக்கபள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ள பள்ளியை மூட அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அங்கு படிக்கும் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யபடும்" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us