தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியின் பழுதடைந்த கட்டடம் இடிக்கப்படுமா?

பள்ளியின் பழுதடைந்த கட்டடம் இடிக்கப்படுமா?

பள்ளியின் பழுதடைந்த கட்டடம் இடிக்கப்படுமா?


UPDATED : நவ 30, 2014 12:00 AM

ADDED : நவ 30, 2014 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2014 12:00 AM ADDED : நவ 30, 2014 11:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் ஆனந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆனந்தூர், ராதானூர், சாத்தனூர், ஆய்ங்குடி, திருத்தேர்வளை, சம்மந்தவயல் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

பள்ளி வளாகத்தில் உள்ள பழைய வகுப்பறை கட்டடம் இடியும் நிலையில் இருந்ததால், மாணவர்கள் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டனர்.

தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால், பள்ளியின் பழைய கட்டடம் படிப்படியாக இடிந்து விழுகிறது. இந்த பழுதடைந்த கட்டடத்தின் ஓரத்தில் உள்ள மரங்களின் நிழலில் மாணவர்கள் சைக்கிள்களை நிறுத்தியுள்ளனர். மதிய நேரங்களில் விளையாடுவதும் இங்கேதான். இதனால் ஆபத்தான சூழல்நிலை உள்ளது.

இந்த பழுதடைந்த கட்டடத்தை அகற்றும்படி பள்ளி நிர்வாகம் சார்பில் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கையில்லை. மாணவர்களின் நலன் கருதி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us