தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள்

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள்

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள்


UPDATED : டிச 10, 2014 12:00 AM

ADDED : டிச 10, 2014 11:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2014 12:00 AM ADDED : டிச 10, 2014 11:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சிலம்பாட்டம் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள், டவுன்ஹாலில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மாணவ, மாணவியர் ஆர்முடன் பங்கேற்றனர். இப்போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

போட்டி முடிவுகள்:10 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில் அபிமன்யு, ஆகாஷ், நவீன்குமார், வினோத் ஆகியோர் முதலிடம் பெற்றனர். மாணவியர் பிரிவில் ஸ்வாதி முதலிடம் பெற்றார். 14 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் போட்டியில், 15-20 கிலோ எடைப்பிரிவில் மகேசன்; 26-30 கிலோ எடைப்பிரிவில் விமல்ராஜ்; 30-35 கிலோ எடைப்பிரிவில் கவுசிக்குமார் முதலிடம் பெற்றனர்.

மாணவியர் போட்டியில் 21- 25 கிலோ எடைப்பிரிவில் லட்சுமிபிரபா; 25-30 கிலோ எடைப்பிரிவில் நந்தினி; 35-40 கிலோ எடைப்பிரிவில் கலைச்செல்வி; 35-40 கிலோ எடைப்பிரிவில் ஹேமலதா; 40-50 கிலோ எடைப்பிரிவில் செல்வநாயகி முதலிடம் பிடித்தனர்.

17 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் போட்டியில், 31-35 கிலோ எடைப்பிரிவில் பால்பாண்டி; 35-40 கிலோ எடைப்பிரிவில் உதயகுமார்; 41-45 கிலோ எடைப்பிரிவில் ராஜேஷ்குமார்; 45-50 கிலோ எடைப்பிரிவில் மிலன்காந்த்; 50-70 கிலோ எடைப்பிரிவில் அலெக்ஸ் தேவித்சன் முதலிடம் வென்றனர். மாணவியர் பிரிவில், 30-35 கிலோ எடைப்பிரிவில் திவ்யபாரதி; 35-40 கிலோ எடைப்பிரிவில் அபிநயா முதலிடம் பெற்றனர்.

18 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் போட்டியில், 50-55 கிலோ எடைப்பிரிவில் மணிகண்டன் முதலிடம் வென்றார். மாணவியர் போட்டியில் 40-45 கிலோ எடைப்பிரிவில் ஜனனிக்கு முதலிடம் கிடைத்தது. 19 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் போட்டியில், 40-45 கிலோ எடைப் பிரிவில் முருகேசன்; 45-50 கிலோ எடைப்பிரிவில் சபரிநாதன் முதலிடம் பெற்றனர்.

மாணவியர் போட்டியில், 35-40 கிலோ எடைப்பிரிவில் கலைவாணி; 40-45 கிலோ எடைப்பிரிவில் மஞ்சுப்ரியா; 51-55 கிலோ எடைப்பிரிவில் மலர்விழி; 56-60 கிலோ எடைப்பிரிவில் மஞ்சுளாதேவி ஆகியோர் முதலிடம் வென்றனர். 19 வயதுக்கு மேற்பட்டோர் மாணவர் போட்டியில், 55-60 கிலோ எடைப்பிரிவில் பிரித்தீவ்ராஜ் முதலிடம்; மாணவியர் போட்டியில், 60-80 கிலோ எடைப்பிரிவில் புவனா முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட சிலம்பாட்டம் சங்கத் தலைவர் தங்கராஜன், பொதுச்செயலாளர் ரவிசந்திரன், துணைத்தலைவர் சொர்ணவேல் ஆகியோர், பரிசுகளை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us