தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்விக்கடன் இருக்க தயக்கம் எதற்கு?

கல்விக்கடன் இருக்க தயக்கம் எதற்கு?

கல்விக்கடன் இருக்க தயக்கம் எதற்கு?


UPDATED : டிச 11, 2014 12:00 AM

ADDED : டிச 11, 2014 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2014 12:00 AM ADDED : டிச 11, 2014 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிரதான வழி

இதில் உங்களுக்கு உகந்த மற்றும் உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் சிறந்த கல்வி நிறுவனங்களை முதலில் இனம் கண்டுகொள்வது மிக மிக்கியம். அடுத்ததாக, சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், தரமான கல்வி, அனுபவமிக்க ஆசிரியர்கள் போன்றவற்றுடன் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள் அதற்கான விலையை மாணவர்களிடம் எதிர்பார்க்கத்தான் செய்யும் என்பதையும் உணருங்கள்.

வெளிநாட்டில் படிப்பதற்கான செலவுகளை சரிகட்ட, வங்கிகள் வழங்கும் கல்விக்கடன் ஒன்றுதான் இன்றளவும், பெரும்பாலான மாணவர்களின் வெளிநாட்டுக் கல்வி கனவை நினைவாக்கும் பிரதான வழியாக இருக்கிறது. எனவே, கல்விக்கடன் கிடைக்கும் பட்சத்தில் உங்களுக்கான கல்வி நிறுவனத்தில் துணிந்து சேரமுடியும்.

தொகையும், காலமும்

பல ஸ்டேட் வங்கிகள், ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் வழங்குகின்றன. இத்தகைய கடன்களின் வட்டி விகிதம் பொதுவாக 11.50 சதவீதம். இவற்றை திருப்பி செலுத்தும் காலம், படிப்பை முடித்த 1 ஆண்டு கழித்தோ அல்லது வேலை கிடைத்து 6 மாதங்கள் கழித்தோ, இவற்றில் எது முதலில் நிகழ்கிறதோ, அப்போது தொடங்குகிறது.

அதிகபட்சம் 12 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்திவிட வேண்டும். அதேசமயம், இக்கடனைப் பெறுவதற்காக கடன் தொகைக்கு 115 சதவீத அளவுக்கு சொத்து உத்தரவாதம் தர வேண்டும். இவை குறித்த விரிவான விபரங்களை வங்கிகளை நேரடியாக அணுகி பெறலாம்.

அமெரிக்காவிலும் வாங்கலாம்

அமெரிக்காவில் உள்ள வங்கிகள், சர்வதேச மாணவர்களுக்கு, எந்தவித சொத்து உத்தரவாதமும் இல்லாமலேயே கடன் வழங்குகின்றன. ஆனால், இந்த விஷயத்தில், சம்பந்தப்பட்ட மாணவருக்கு ‘கியாரண்டி’ தரும் ஒரு அமெரிக்க குடிமகன் அல்லது கிரீன் கார்டு வைத்திருப்பவரின் இணூஞுஞீடிt ஏடிண்tணிணூதூ கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த வகை கல்விக்கடனில், உள்நாட்டில் பெறும் கடனைவிட நல்ல பலன்கள் உண்டு. இதற்கு 7 சதவீதம் முதல் 9 சதவீதம் வரையே வட்டி விதிக்கப்படுகிறது. மேலும், இக்கடனை மொத்தம் 25 ஆண்டுகள் கால அளவில் திருப்பி செலுத்தலாம்.

எனவே, ஒரு வெளிநாட்டு பல்கலைக்கு விண்ணப்பிக்கும் முன்பாகவே, உங்களது செலவுகளை சமாளிப்பதற்கான வழிகளை திட்டமிட்டுக் கொள்வது நல்லது. அப்போதுதான், உங்களின் வெளிநாட்டு கல்வி இனிய அனுபவமாக அமையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us