தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி


UPDATED : டிச 14, 2014 12:00 AM

ADDED : டிச 14, 2014 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2014 12:00 AM ADDED : டிச 14, 2014 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய சுவாமி விவேகானந்தா பல்கலை வளாகத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.

போட்டிகளை, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வி நிறுவனமும், கோவை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நடத்தின. இதில், மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர், பார்வை குறைபாடு உடையோர், கை, கால் குறையுடையோர் உள்ளிட்ட, 64 பேர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பந்தயம், வாலிபால், கபடி, எறிபந்து, மேஜைபந்து, பேட்மின்டன் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. காது கேளாதோருக்கான ஆண்கள் கபடி போட்டியில், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய ஐ.டி.ஐ., மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

மனவளர்ச்சி குன்றியோருக்கான எறிபந்து போட்டியில் டி.ஏ.டி., கலா நிலையம் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். கை, கால் குறை உடையோருக்கான மேஜைபந்து போட்டியில் எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் பள்ளி மாணவர் ரவிச்சந்திரன் முதலிடம் பெற்றார். இதே பிரிவில், ஆண்களுக்கான பேட்மின்டன் போட்டியில் அரசுக் கல்லுாரி மாணவர் மாயகண்ணன் முதலிடம் பெற்றார்.

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான மாற்றி அமைக்கப்பட்ட வாலிபால் போட்டியில், சுவாமி சிவானந்தா பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us