UPDATED : ஜன 10, 2015 12:00 AM
ADDED : ஜன 10, 2015 06:45 AM
சென்னை: குருதி நாள நெளிவுக்கான நவீன சிகிச்சைகள் குறித்த, இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம், சென்னை, மியாட் மருத்துவமனையில், நேற்று துவங்கியது. இதயத்தில் இருந்து, மூளைக்கும், சிறுநீரகத்துக்கும் ரத்தத்தைக் கொண்டு செல்லும், அயோடா குருதி நாளத்தில், வீக்கம் ஏற்படுவதே, குருதி நாள நெளிவு எனப்படுகிறது. இதனால், சரியாகச் சாப்பிட முடியாமை, செரிமான பிரச்னை, மார்பு வலி, முதுகு வலி போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
நவீன சிகிச்சை இதற்கான நவீன சிகிச்சை முறைகள் குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம், சென்னை, மியாட் மருத்துவமனையில் நேற்று துவங்கியது. கருத்தரங்கை துவங்கி வைத்து, நிறுவன தலைவர் டாக்டர் மோகன்தாஸ் பேசியதாவது: நிதி ஒதுக்கீடு இல்லை வெளிநாடுகளில், கல்வி, மருத்துவ ஆராய்ச்சிக்கு அதிக முதலீடுகள் செய்யப்படுகின்றன. நவீன சிகிச்சை முறைகள் கண்டறியப்படுகின்றன. நம் நாட்டில் மருத்துவ ஆராய்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. இந்த சூழலில், பிற நாட்டு சிகிச்சை முறைகளை, நம் நாட்டினருக்கு ஏற்ப மாற்றியமைத்து, பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மருத்துவக் கருத்தரங்கம், மிகவும் பயனுள்ளதாக அமையும்.இவ்வாறு, அவர் கூறினார்.
”இந்தியாவில், 7 லட்சம் பேர், இந்த நோய் பாதிப்பில் சிக்கி உள்ளனர். ஆனால், 1,000 பேர் மட்டுமே உரிய கிகிச்சை பெறுகின்றனர். மற்றவர்கள் விழிப்புணர்வு இன்றி, பல்வேறு சிக்கல்களால், மரணத்தைச் சந்திக்கின்றனர்,” என, டாக்டர் பாஷி கூறினார்.இத்தாலி, சீனாவில் உள்ள பல்கலைகளின், இதய ரத்த நாள சிகிச்சை நிபுணர்கள், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், 300க்கும் மேற்பட்ட டாக்டர்களும் இதில் பங்கேற்றனர்.
