UPDATED : ஜன 12, 2015 12:00 AM
ADDED : ஜன 12, 2015 11:21 AM
மேம்பாட்டு பயிற்சி: மதுரை யாதவர் கல்லுாரி வணிகவியல் துறை மற்றும் வணிக மேலாண்மை துறை சார்பில் ஆய்வுத்திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. துறைத் தலைவர் ராஜேஸ்வரி வரவேற்றார். வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி பேராசிரியர் வன்னியராஜன் கட்டுரை படைப்புகளை எழுதுவதற்கு தேவையான மூலக்கூறுகள் குறித்து பேசினார்.
நிறுவனர் தினவிழா: மதுரை கே.எல்.என்., தகவல் தொழில் நுட்ப கல்லுாரியில் நிறுவனர் தின விழா நடந்தது. முதல்வர் ஞானசேகரன் வரவேற்றார். கல்லுாரித் தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார். செயலாளர் கணேஷ் தலைமை வகித்தார். வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் இளசைசுந்தரம் பேசினார்.
ஆண்டு விழா: வாடிப்பட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 9வது ஆண்டு விழா நடந்தது. மாவட்டக் கல்வி அலுவலர்(ஓய்வு) ராஜேந்திரன் தலைமை வகித்தார். தொடக்க கல்வி அலுவலர் விஜயலெட்சுமி (ஓய்வு) முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை கலைச்செல்வி வரவேற்றார். அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
என்.எஸ்.எஸ்., முகாம்: மேலுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் சிலோன்காலனியில் முகாம் நடந்தது. தலைமையாசிரியர் துரைப்பாண்டி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் தங்கழகு, உதவி அலுவலர் வீரபாண்டி, தமிழாசிரியர் ராமானுஜம் முன்னிலை வகித்தனர். சிலோன்காலனி, ஜோதிநகர் உட்பட பல்வேறு இடங்களில் மாணவர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
* செக்கானுாரணி அருகே கே.புளியங்குளம் கேரன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சார்பில் என்.எஸ்.எஸ்., முகாம் கே.பூச்சம்பட்டியில் நடந்தது. ஏழு நாட்களாக நடந்த முகாமில் தலைமைத்துவம், சுகாதாரம் உட்பட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடந்தன. கொசு ஒழிப்பு, கழிவு நீர் வாய்க்கால் சீரமைப்பு பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். மரக்கன்றுகள் நடப்பட்டன.
