UPDATED : ஜன 13, 2015 12:00 AM
ADDED : ஜன 13, 2015 11:23 AM
கோவை: பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து இறுதி போட்டியில், காருண்யா சர்வதேச பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
கோவைப்புதுார் வி.எல்.பி., ஜானகிஅம்மாள் கலை கல்லுாரி சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி கல்லுாரியில் நடந்தது. அரைஇறுதி போட்டியில் காருண்யா சர்வதேச பள்ளி, 5-1 கோல் கணக்கில் கார்மல் கார்டன் பள்ளியை வென்றது.
காருண்யா பள்ளியின் தொவாங் 3 கோல்களும், பெத்சிங் 2 கோல்களும்; கார்மல்கார்டன் பள்ளியின் சல்மோன் ஒரு கோலும் அடித்தனர்.
மற்றொரு போட்டியில், தேவாங்கா பள்ளி, 4-2 கோல் கணக்கில் கீர்த்திமான் பள்ளியை வென்றது. தேவாங்கா பள்ளியின் முகேஷ்குமார் 4 கோல்களும், கீர்த்திமான் பள்ளியின் விதின், டேனியல் தலா ஒரு கோலும் அடித்தனர். மூன்றாவது இடத்துக்கான போட்டியில், கார்மல்கார்டன் பள்ளி 7-1 கோல் கணக்கில் கீர்த்திமான் பள்ளியை வென்றது.
இறுதி போட்டியில் காருண்யா சர்வதேச பள்ளி, 6-1 கோல் கணக்கில் தேவாங்கா மேல்நிலை பள்ளியை வென்றது. காருண்யா பள்ளியின் பெத்சிங், தவுனா தலா மூன்று கோல்கள் அடித்தனர். காருண்யா பள்ளி வீரர் தவுணா சிறந்த வீரராக தேர்வு பெற்றார்.
