தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.சி., கேட்டு மாணவர்கள் போராட்டம்

டி.சி., கேட்டு மாணவர்கள் போராட்டம்

டி.சி., கேட்டு மாணவர்கள் போராட்டம்


UPDATED : ஜன 22, 2015 12:00 AM

ADDED : ஜன 22, 2015 03:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2015 12:00 AM ADDED : ஜன 22, 2015 03:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அடிப்படை வசதிகள் செய்து தராததால், பாரதியார் பல்கலைக்கூட மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேற, மாற்றுச்சான்றிதழ் (டி.சி.) கேட்டு, வகுப்புகளை புறக்கணித்து நேற்று போராட்டம் நடத்தினர்.

அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில், இளங்கலை ஓவிய நுண்கலை, இசை மற்றும் நடன துறைகளில், 136 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் கடந்த 3 ஆண்டுகளாக முதல்வர் பணியிடம் காலியாக உள்ளது. கல்லூரிக்கு முதல்வரை நியமிக்க வேண்டும், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும், பட்ட மேற்படிப்பு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எனினும் அரசு இக்கல்வி நிறுவனத்திற்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறி, இங்கு பயிலும் 136 மாணவர்களும், கல்லூரியில் இருந்து வெளியேற, மாற்றுச்சான்றிதழ் கேட்டு கடந்த 2 தினங்களுக்கு முன்பு கல்லூரி நிர்வாகத்திடம் கடிதம் வழங்கினர்.

மாணவர்கள் நேற்று முன்தினம், துறை செயலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கல்லூரிக்கு முதல்வர் நியமிப்பதில் பல சிக்கல் உள்ளதால், உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாற்றுச்சான்றிதழ் (டி.சி.) கேட்டு, வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் கல்லூரி வாயிலில் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us