தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவையில் நடந்த கால்பந்து போட்டி

கோவையில் நடந்த கால்பந்து போட்டி

கோவையில் நடந்த கால்பந்து போட்டி


UPDATED : ஜன 28, 2015 12:00 AM

ADDED : ஜன 28, 2015 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2015 12:00 AM ADDED : ஜன 28, 2015 11:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவையில் நடந்த கால்பந்து போட்டியில், சிறுவர்கள், திறமையை வெளிப்படுத்தினர்.

வடவள்ளி பிரபஞ்ச ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி, சவுடேஸ்வரி மாடல் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. மூன்று பிரிவுகளாக நடந்த போட்டியில், கோவை மாவட்டத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

10 வயதுக்கு உட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில், ஜி.ஜி., கால்பந்து அணியும், வடவள்ளி கால்பந்து அணியும் மோதின; இதில், வடவள்ளி அணி வெற்றி பெற்றது. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், ஜி.ஜி., கால்பந்து அணியும், கோவைப்புதுார் சுகி கால்பந்து அணியும் மோதின. ஆட்டம் டிராவில் முடிந்ததால், டை பிரேக்கர் முறையில், கோவைப்புதுார் அணி வெற்றி பெற்றது. மூன்றாவது நடந்த 19 வயதுக்கு உட்பட்ட போட்டியில், கோவைப்புதுார் சுகி கால்பந்து அணியும், மதுக்கரை கால்பந்து அணியும் மோதின. ஆட்டத்தின் கடைசி நேரத்தில், அடுத்தடுத்த மூன்று கோல்கள் அடித்து, மதுக்கரை அணி வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us