மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
UPDATED : பிப் 01, 2015 12:00 AM
ADDED : பிப் 01, 2015 11:01 AM
அ நிறம் | அளவு
சூலூர்: குடியரசு தினத்தை ஒட்டி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் சூலூரில் நடந்தன.
சூலூர் ஆர்.வி.எஸ்., கல்லூரி தகவல் தொழில்நுட்பத்துறை மாணவர்கள் சார்பில், சூலூர் உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இசை நாற்காலி, ஓட்டப் பந்தயம், லெமன் ஸ்பூன் உள்ளிட்ட போட்டிகளில் மாற்றுத்திறன் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், நோட்டு, புத்தகங்கள், பேக் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. உண்டு உறைவிடப்பள்ளி ஆசிரியைகள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பலர் பங்கேற்றனர்.
